இவுங்கதான் மாஸ்: 2021-ஐ கலக்கிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ- கேமரா பிரிவில் பலகட்டம் முன்னேற்றம்!

|

2021 ஆம் ஆண்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு அம்சங்களோடு அறிமுகமாகி இந்திய சந்தையை ஆக்கிரமித்தது. அனைத்து ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களும் பிரதான கவனம் செலுத்துவது கேமராக்களில் தான். பயனர்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது முக்கியமாக கவனம் செலுத்துவது கேமராக்களில் தான். அதற்கேற்ப ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் சாதனத்தில் கேமராவிற்கான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து 2021 ஆம் ஆண்டையே கலக்கி இருக்கிறது.

கேமரா பிரிவில் பல கட்டம் முன்னேற்றம்

கேமரா பிரிவில் பல கட்டம் முன்னேற்றம்

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் மூலம் நிறுவனம் கேமரா பிரிவில் புதிய சாத்தியக் கூறுகளை கொண்டு வந்தது. அதே சமயத்தில் சாம்சங் நிறுவனமும் தனது முதன்மை மாடல்களில் ப்ரீமியம் கேமரா அமைப்புகளை கொண்டு வந்தது. 2021 ஆம் ஆண்டில் பல ஸ்மார்ட்போன்கள் கேமரா அமைப்புகளில் புதுமைகளை புகுத்தி வழங்கின. 2021 ஆம் ஆண்டில் சிறந்த கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் விவோ, சியோமி, ஒன்பிளஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது.

விவோ எக்ஸ் 70 ப்ரோ +

விவோ எக்ஸ் 70 ப்ரோ +

விவோ எக்ஸ் 70 ப்ரோ + 2021 சிறந்த கேமராக்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் செஸ் ஆதரவு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இது சாம்சங் ஜீஎன்1 சென்சார் கொண்ட 50 எம்பி ஓஐஎஸ் இயக்கப்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது. விவோ ஸ்மார்ட்போனானது 48 எம்பி அல்ட்ரா வைட் கேமராவுடன் கிம்பல் மாட்யூல், 12 எம்பி ஓஐஎஸ் இயக்கப்பட்ட 5எக்ஸ் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி ஓஐஎஸ் இயக்கப்பட்ட பெரிஸ்கோப் கேமராவுடன் வருகிறது. மினியேச்சர் ஜிம்பிள் அமைப்பு நிலையான வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது. நிலைப்படுத்தலின் மூன்று வெவ்வேறு நிலைகளில் தேர்வு செய்து விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் சாதனம் இந்த பட்டியலில் இருக்கிறது. ஆப்பிள் இந்த ஆண்டு நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 ப்ரோ உடன் மாபெரும் கேமராக்களுடன் வருகிறது. இரண்டு ப்ரோ மாடல்களிலும் சிறப்பு புகைப்பட நோக்கங்களுக்காக மூன்று 12 எம்பி சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த டிரிபிள் லென்ஸ் பின்புற கேமரா அமைப்பானது குறைந்த ஒளி திறன்களுடன் கூடிய சிறந்த முதன்மை காட்சியை பதிவு செய்ய அனுமதிக்கிறது. 3 எக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் மற்றும் வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. 1080 பிக்சல் 30 எஃப்பிஎஸ் மற்றும் 4கே 30 எஃப்பிஎஸ் செயல்முறை வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா இந்தியாவில் பிரபலமான சாதனங்களில் ஒன்றாகும். இந்த சாதனம் 108 எம்பி வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் அப்பெர்சர் அளவு உடன் 24 எம்எம் குவிய நீள லென்ஸ் உடன் கூடிய சாம்சங் ஐசோசெல் எச்எம்3 சென்சாரை கொண்டுள்ளது. இது பிடிஎஃப் மற்றும் ஓஐஎஸ் ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 50 எம்பி சாம்சங் ஜிஎன்2 சென்சார், 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்586 வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 48 எம்பி 5எக்ஸ் ஆப்டிகல் சென்சார் உடன் வருகிறது. இந்த சாதனம் படங்களை பதிவு செய்ய 12 மிமீ முதல் 120 மிமீ வரை குவிய நீளம் கொண்டிருக்கிறது. இந்த மூன்று லென்ஸ்களும் நைட் மோட் ஆக்டிவேட் ஆதரவோடு வருகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனம்

தொடர்ந்து இந்த பட்டியலில் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனமும் இடம்பெற்றிருக்கிறது. இது ஹேசல்ப்ளாட் கேமரா வசதியோடு வருகிறது. அடுத்ததாக கூகுள் பிக்சல் 4ஏ சாதனம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சாதனம் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் 2021 ஆம் ஆண்டின் கேமரா தொகுப்பு ஸ்மார்ட்போனில் சிறந்தவையாக இருக்கிறது. ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனமும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Check out the list of smartphones that came with the best cameras in 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X