2022 இல் Google-ஐ அதிர வைத்த ஆசியர்கள்! விஜய், அஜித் பிடித்த இடம் இதுதான்: நம்பர் 1 யாரு தெரியுமா?

|

2022 ஆம் ஆண்டு எப்போது ஆரம்பித்தது என்றே தெரியவில்லை அதற்குள் முடியப் போகிறது என்று புலம்புபவர்கள் ஏராளம். ஆனால் லாக் டவுனில் சிக்கி தவித்த பல துறைகளுக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டாக 2022 அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரிவுகளின் விவரங்களை Google வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

2022 இல் Google-ஐ அதிர வைத்த ஆசியர்கள்! விஜய், அஜித் பிடித்த இடம் எது?

2022 ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய பிரபலங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. திரைப்படம், விளையாட்டு, பிரபலம் என்பதன் அடிப்படையில் தனித்தனியாக டாப் பட்டியலை கூகுள் வெளியிட்டு வருகிறது. அதன்படி வெளியான பட்டியல் தான் இது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களை பொறுத்தவரை இந்தியா மற்றும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் தான் இதில் அதிக இடம் பிடித்திருக்கின்றனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பிரபல பாடகரான பிடிஎஸ் எனப்படும் TAEHYUNG "வி" ஆவார். இந்த இசைக்குழுவை சேர்ந்தவர் தான் இரண்டாம் இடததை பிடித்திருக்கிறார். அவர் ஜங்கூக் (JUNGKOOK) ஆவார். இந்த இரண்டு பேர் தான் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்கின்றனர்.

2022 இல் Google-ஐ அதிர வைத்த ஆசியர்கள்! விஜய், அஜித் பிடித்த இடம் எது?

சரி, நமது மாநிலத்தை சேர்ந்த பிரபலங்கள் குறித்து பார்க்கையில், இதில் நடிகர் விஜய் 15வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேவேளையில் நடிகர் அஜித்குமார் 78வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோல் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் இந்த பட்டியலில் 46வது இடத்தையும், ரஜினிகாந்த் 68வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

நடிகைகளை பொறுத்தவரையில், காஜல் அகர்வால் 13வது இடத்தையும் சமந்தா 17வது இடத்தையும் பிடித்திருக்கிறார். வாரிசு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த பட்டியலில் 22வது இடத்தையும் தமன்னா 31 மற்றும் நயன்தாரா 33வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

2022 இல் Google-ஐ அதிர வைத்த ஆசியர்கள்! விஜய், அஜித் பிடித்த இடம் எது?

ஆசிய 2022 பிரபலங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய பிரபலமாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார். ஆசிய பட்டியலில் தமிழக பிரபலங்கள் என்று பார்க்கும் போது 15வது இடத்தில் இருக்கும் விஜய் தமிழக பிரபலமாக முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்த பட்டியலில் 24வது இடத்தை பிடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் 51வது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவில் 2022 இல் ட்ரெண்டிங் ஆன தலைப்புகள் குறித்து பார்க்கலாம். கோவிட்-19ஐ விட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதில் தான் மக்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகிய இரண்டு போட்டிகள் இந்தாண்டில் அதிக தேடப்பட்டவையாக இருந்திருக்கிறது.

இந்தியர்கள் பொழுதுபோக்கு தொடர்பான விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டி இருக்கின்றனர். 2022 டிரெண்டிங் தேடலில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் தான், இரண்டாவது இடத்தில் கோவின் ஆப் மற்றும் மூன்றாவது இடத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை இருக்கிறது.

2022 இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். அதாவது இந்த பட்டியல் இந்தியாவை வைத்து கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த பட்டியலில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டாவது இடத்திலும் பிரதமர் ரிஷி சுனர் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொழிலதிபர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Check out the list of most popular Asians on Google in 2022: Where is in vijay and ajith?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X