அடுத்த மாசம் 31 கடைசி.. Aadhaar, பான் கார்டு வச்சிருந்தா அலெர்ட்.. இல்லன்னா சிக்கல் ஆயிடும்.. ஏன்?
லோன் வேண்டுமா, கிரெடிட் கார்டு வேண்டுமா, அல்லது இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா எனத் தினமும் உங்களுக்கு போன் கால்கள் வந்துள்ளதா? அப்படி என்றால் உங்களதுபான் கார்டு தகவல்கள் எங்கேயோ கசிந்து உள்ளன என்று தான் அர்த்தம். கவலை வேண்டாம். இனி இதற்கு ஒரு முடிவு கட்டப்படும்.
தற்போது நாடு முழுக்க டேட்டா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு. இதன் ஒரு பகுதியாகத் தான் தனியார் நிறுவனங்களால் பான் விவரங்களைச் சோதனை செய்யும், ஆய்வு செய்யும் முறையைத் தடை செய்ய உள்ளனர். குறிப்பாக அங்கீகரிக்கப்படாத முறையில் உங்களின் பான் விவரங்களை யாரும் சோதனை செய்ய முடியாத அளவிற்குத் தடை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் பான் கார்டில் உள்ள கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வருமான வரித்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
குறிப்பாக வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை (Aadhaar Card) பான் கார்டுடன் (pan card) இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதார் உடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் எளிமையாக சோதனை செய்யப்படும், இதுதவிர பான் கார்டை வைத்துச் செய்யப்படும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.
அதேசமயம் நீங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு உங்கள் பான் செயல் இழக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பான் மற்றும் ஆதார் கார்டுகள் இணையும் போது உங்கள் பான் கார்டை தேவையின்றி நிறுவனங்கள் எளிதாக ஆய்வு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். இதன் மூலம் சில தனியார் நிறுவனங்கள் உங்கள் பான் கார்டு விவரங்களைச் சோதனை செய்து உங்களுக்கு போன் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஆதார் உடன் பான் கார்டு இணைக்கப்பட்டால் கூடுதல் பாதுகாப்போடு இருக்கும். இதனால் ஃபின்டெக் நிறுவனங்கள் மிக எளிதாக உங்களை தொடர்புகொள்ள முடியாது. ஆனாலும் ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். ஒருவேளை உங்களின் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதை பயன்படுத்தி உங்களுக்கு இனி கால் செய்ய முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் உடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் ஆதார் போன்று பான் கார்டும் மிகவும் முக்கியம் ஆகும். பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளைப் பெற முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications