கூகுள், ஜியோ நிறுவனங்களின் மலிவு விலை ஸ்மார்ட்போன்.! முக்கிய தகவலை வெளியிட்ட சுந்தர் பிச்சை.!

|

ஜியோ நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஜியோ நிறுவனம் சிறந்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. மேலும் கூகுள் நிறுவனம் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுவரும் திட்டம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா மெய்நிகர் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

சிஇஒ சுந்தர் பிச்சை

இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் கம்மி விலை ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களை கூகுள் நிறுவனத்தின் சிஇஒசுந்தர் பிச்சை தற்போது வெளிபடுத்தி உள்ளார்.

ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து

அதாவது ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுடனான ஒரு மெய்நிகர் மாநாட்டின் போது, கம்மி விலை ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவர கூகுள் நிறுவனம் ஜியோவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.

குறைந்த விலை ஸ்மார்ட்போனை

குறிப்பாக குறைந்த விலை ஸ்மார்ட்போனை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். பின்பு இந்த திட்டத்தில் முன்னேற கடமைப்பட்டுள்ளோம், அதேசமயம் ஜியோவுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று அந்த மெய்நிகர் சந்திப்பின் போது கூறியுள்ளார் சுந்தர் பிச்சை.

கூகுள் மற்றும் ஜியோ

ஆனால் இதுவரை கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் அந்த மலிவு விலை ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை, வெளியீட்டு தேதி குறித்த எந்த விவரங்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் போட ஒரு செல்பீ போட்டோ எடுத்த இளம்பெண்: ஆனா அதுல இப்படியொரு சிக்கல் இருக்கும்னு நினைக்கல.!இன்ஸ்டாகிராமில் போட ஒரு செல்பீ போட்டோ எடுத்த இளம்பெண்: ஆனா அதுல இப்படியொரு சிக்கல் இருக்கும்னு நினைக்கல.!

 ஜியோ நிறுவனம் மலிவு விலை லேப்டாப்

இருந்தபோதிலும் ஜியோ நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க்கை நாட்டில் அறிவிக்கும்போது இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் பற்றி தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் மலிவு விலை லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜியோ லேப்டாப் பற்றி தகவல்கள்

ஏற்கனவே ஜியோ லேப்டாப் பற்றி தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ஜியோ லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜியோபுக் லேப்டாப் மாடலை

குறிப்பாக புதிய ஜியோபுக் லேப்டாப் மாடலை உருவாக்க சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோகூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது. ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த
ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும்

ப் மாடலில் குவால்காம்

ஜியோபுக் லேப்டாப் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப் 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி ஈஎம்சி ஸ்டோரேஜ் பின்பு 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்என இரண்டு வேரியண்ட்களில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சத்தமில்லாமல் இரண்டு திட்டங்களில் அசத்தலான சலுகைகளை அறிவித்த பிஎஸ்என்எல்.!

சத்தமில்லாமல் இரண்டு திட்டங்களில் அசத்தலான சலுகைகளை அறிவித்த பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனாலும் பிஎஸ்என்எல் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவை வழங்கினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

ஸ்என்எல் நிறுவனம் ரூ.499 மற்

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.499 மற்றும் ரூ.198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் கண்டிப்பாக பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 45 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கியது, ஆனால் தற்போது 50 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு நன்மைகள் இந்த ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கு பதிலாக இலவச லோக்தூன் உள்ளடக்கத்துடன் வருகிறதுஇந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 1ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது, ஆனால் தற்சமயம் இந்த திட்டததில் 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 180ஜிபி டேட்டா நன்மையை பெற முடியும். இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டு சந்தாவை இந்த திட்டத்தில் பெறமுடியும். மேலும் இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்குமுன்பு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த சில ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் ஆனது தற்சமயம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.108 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற கால் அழைப்பு மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகள் 60 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவசஎஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 60 நாட்கள் வரை மட்டுமே இலவச நன்மைகள் கிடைக்கும் என்றும். மேலும் 60 நாட்கள் முடிந்த பின்பு உங்களுக்கு டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல வவுச்சர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Cheapest smartphone from Google and Jio! Sundar Pichai released important information: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X