Home
News

Jio பயனர்கள் இந்த பிளான்களை பார்க்காமல் பிஎஸ்என்எல்-க்கு போயிடாதீங்க.. எக்ஸ்ட்ரா டேட்டா.. என்ன விலை?

கடந்த மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கட்டண உயர்வை அறிவித்தன. அப்போது முதல் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. எனவே தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர். ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் முழுமையாக 4ஜி சேவையை வழங்கவில்லை.

அதாவது சில முக்கிய இடங்களில் மட்டும் தான் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முழுமையாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. எனவே இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்தால் சிக்னல் பிரச்சனை இருக்காது. சரி இப்போது விஷயத்துக்கு வரும் ஜியோ வழங்கும் சில அசத்தலான திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

Jio பயனர்கள் இந்த பிளான்களை பார்க்காமல் பிஎஸ்என்எல்-க்கு போயிடாதீங்க..

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் (jio rs 349 plan) ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். கம்மி விலையில் ஒரு நல்ல திட்டத்தை எதிர்பார்க்கும் ஜியோ பயனர்கள் இதில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 626 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா வழங்கப்படும் . ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

ஆனாலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் (jio rs 899 plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா வழங்கப்படும் .

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jio பயனர்கள் இந்த பிளான்களை பார்க்காமல் பிஎஸ்என்எல்-க்கு போயிடாதீங்க..

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (jio rs 999 plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா வழங்கப்படும் . இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக ஜியோ பயனர்கள் இதுபோன்ற பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Cheapest Jio Prepaid Plans with 2GB Data and Unlimited Voice Calls Daily:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X