Home
News

மகளின் படிப்புக்காக செல்போன்: பணம் எப்படி கிடைத்தது தெரியுமா- தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லாமல் சிரமப்பட்டு வருவதை அறிந்த தந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஊரடங்கு

நாடு முழுவதும் ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள்

பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள்

இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் இல்லை

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் இல்லை

பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) ஆய்வு ஒன்று நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 27 சதவீத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற சாதனங்கள் கிடைக்கவில்லை என தெரிய வந்தது.

12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி

12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி

இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூர் பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவர் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதி இல்லாத காரணத்தால் பக்கத்து வீட்டுக்காரர்களிடன் உதவி கேட்டு ஆன்லைன் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து தகராறில் கொலை

சொத்து தகராறில் கொலை

இவரது தந்தை ஆனந்த் நாகேஷியா என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தனது உறவினர் ஒருவரை சொத்து தகராறில் கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தன் மகள் செல்போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புக்கு சிறமப்பட்டு வருவதை அறிந்து, தான் ஜெயலில் சம்பாதித்த பணத்தை கொண்டு தன் மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஜெயலில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட்போன்

ஜெயலில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட்போன்

இந்த நிகழ்வு குறித்து கூறிய ஆனந்த்., தன் மகள் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் இல்லாத காரணத்தால் சிரமப்பட்டு வருவதை அறிந்தேன், இதன்காரணமாக ஜெயலில் இருந்து சம்பாதித்த பணத்தை வைத்து தன் மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தேன்.

மருத்துவராக வேண்டும் என்ற மகளின் ஆசை

மருத்துவராக வேண்டும் என்ற மகளின் ஆசை

மருத்துவராக வேண்டும் என்று தன் மகள் ஆசைப்படுவதாகவும் எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக அனைவருக்கும் உதவ முன் வரவேண்டும் என்ற நோக்கில் மகளின் கனவை இடையூறி இன்றி தொடர முயற்சிகளை தான் மேற்கொள்வேன் என கூறினார்.

Best Mobiles in India

English summary
Chattisgarh Father Buy Smartphone to Daughter for Online Class From Prisons Savings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X