வாட்ஸ் ஆப் சாட்டிங்கினால் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்.!
ஹைதெராபாத்: செகந்திராபாத்தை சேர்ந்த இருவர் வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்திருக்கின்றனர். இந்தக் காதல் கதை தற்பொழுது தற்கொலை இல் முடிந்துள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
ஹைதெராபாத்: செகந்திராபாத்தை சேர்ந்த இருவர் வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்திருக்கின்றனர்.
இந்தக் காதல் கதை தற்பொழுது தற்கொலை இல் முடிந்துள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

வாட்ஸ் ஆப் காதல்
ஹைதெராபாத் இல் உள்ள செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த சிவா குமார்(27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா(19) இருவரும் சில வருடங்களாக வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்திருக்கின்றனர். இந்தநிலையில் சென்ற மாதம் சிவா குமார்க்கும், லஹாரி என்ற பெண்ணிற்கும் குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வற்புறுத்தி திருமணம்
திருமணம் ஆகியும் சிவா குமார் தன் காதலியுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் தொடர்பில் இருந்து இருந்திருக்கிறார். சிவா குமார் விருப்பமில்லாமல் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.வெண்ணிலா மற்றும் சிவா இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் சாட்டிங்
சிவா குமார் மற்றும் வெண்ணிலாவின் காதல் சாட்டிங்களை எதிர்பாராத விதமாக லஹாரி பார்த்திருக்கிறார். லஹாரி,சிவா குமாரிடம் உடனே இந்தக் காதலை நிறுத்திக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்.

மிரட்டல்
ஆனால் சிவா குமார், அதைக் கேட்காமல் தொடர்ந்து சாட்டிங் செய்து கொண்டிருக்க, உடனே இந்தக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் இதைப் பற்றி தெரிவிக்கப்போவதாக லஹாரி அவரை மிரட்டி இருக்கிறார்.

தற்கொலை
பயத்தில் மணம் உடைந்த சிவா குமார், அவர் அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவா வின் தற்கொலையை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா துக்கம் தாங்காமல் நேற்று அமிலத்தை உட்கொண்டு தனது வாழ்க்கையையும் முடித்துக்கொண்டார். வாட்ஸ் ஆப் சாட்டிங்கினால் இருவர் உயிர் இழந்த, இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications