Home
News

OpenAI வெளியிட்ட புதிய அப்டேட்: ChatGPT வாய்ஸ் மோட்.. இப்போது சாட் அடுத்த லெவல்.. நேச்சுரல் எக்ஸ்பீரியன்ஸ்!

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது சாட்ஜிபிடியில் (ChatGPT) புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இதில், வாய்ஸ் மோட் (Voice Mode) பீச்சர் நேரடியாக சாட்டுக்குள் (Chat) இணைக்கப்பட்டுள்ளது. இதனால், யூசர்கள் தனியாக வாய்ஸ் மோடுக்கு மாறாமல், ஒரே சாட்டில் டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் சாட் செய்து கொள்ள முடியும். இந்த வாய்ஸ் மோட் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாட்ஜிபிடி வாய்ஸ் மோட்

சாட்ஜிபிடி மொபைல் ஆப் (ChaGPT Mobile App) மற்றும் வெப் வெர்ஷனிலும் (Web Version) இந்த வாய்ஸ் மோட் கிடைக்கிறது. முன்பு தனியாக மட்டுமே வாய்ஸ் சாட் செய்ய முடிந்தது. இப்போது, ஒரே சாட்டில் கொடுக்கப்படுகிறது. இது லைவ் டிரான்ஸ்கிரிப்ட்களை (Live Transcript) கொடுத்தாலும், ஜெமினி லைவ் போல நேச்சுரல் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்க முயற்சித்து இருக்கிறது.

OpenAI வெளியிட்ட புதிய அப்டேட்: ChatGPT வாய்ஸ் மோட்.. அடுத்த லெவல்!

இருப்பினும், ஆங்கிலத்தில் மட்டுமே அந்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். மற்ற மொழிகளில் நன்றாக இருந்தாலும் கிட்டத்தட்ட படித்து சொல்லும்படியான எக்ஸ்பீரியன்ஸை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இது டெக்ஸ்ட்களை படிக்க சிரமப்படும் யூசர்கள் அல்லது பார்வை குறைபாடு இருக்கும் யூசர்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் தேவைப்படும் நேரத்தில் டச் செய்யாமல் இதை பயன்படுத்த முடியும்.

* மல்டி டாஸ்கிங்
* ரீடிங் & டைப்பிங் டிபிகல்டிஸ்
* மொழித்திறன்
* குயிக் ஸ்போக்கன் ஆன்சர்

மல்டி டாஸ்கிங்:
இந்த வாய்ஸ் மோட் வழியாக இமேஜ்கள் மற்றும் மேப் நேவிகேஷன்களையும் அணுக முடியும். ஆகவே, டிரைவிங் செய்து கொண்டிருக்கும்போதும் குக்கிங் செய்து கொண்டிருக்கும்போதும் அல்லது வேறு ஏதாவது ஒரு வேலையில் இருக்கும்போதும், சாட்ஜிபிடியை வாய்ஸ் மூலமே அணுகி கொள்ள முடியும். இதனால், சிரமான நேரத்தில் டைப் செய்து பதில்களை தேட வேண்டியாது இருக்காது.

OpenAI வெளியிட்ட புதிய அப்டேட்: ChatGPT வாய்ஸ் மோட்.. அடுத்த லெவல்!

ரீடிங் & டைப்பிங் டிபிகல்டிஸ்: படிக்கவும், டைப் செய்யவும் சிரமப்படும் யூசர்களுக்கு இந்த வாய்ஸ் மோட் பயன்படுத்த எளிதாக இருக்கும். அதே நேரத்தில் எழுத படிக்க தெரியாத யூசர்கள் கூட வாய்ஸ் மூலம் எதையாது கேட்டு அதை தெரிந்து கொள்ள முடியும். ஒரேவொரு டேப் செய்ய தெரிந்திருந்தால் போதும், இந்த வாய்ஸ் மோட் அவர்களுக்கு பதில்களை கொடுக்கும்.

மொழித்திறன்: இதன் மூலம் ஆங்கிலம் பேச விரும்பும் யூசர்கள் எளிதாக உரையாடல் செய்ய முடியும். மொழித் தொடர்பான சந்தேகங்களை வாய்ஸ் மூலமே கேட்டு, அதை உச்சரிப்பது எப்படி, அதற்கான அர்த்தம் என்ன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இது மொழிக்கு மட்டுமல்ல, மற்ற கல்வி சார்ந்த திறன்களை வளர்த்து கொள்ளவும், சாட்ஜிபிடி யூசர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.

OpenAI வெளியிட்ட புதிய அப்டேட்: ChatGPT வாய்ஸ் மோட்.. அடுத்த லெவல்!

குயிக் ஸ்போக்கன் ஆன்சர்: சாட்ஜிபிடியில் சில நேரங்களில் டெக்ஸ்டாக கிடைக்கும் பதில்களை முழுவதும் படித்து தெரிந்து கொள்ள தாமதம் ஏற்படலாம். ஆனால், வாய்ஸ் மூலமாக அதை தெரிந்து கொள்ளும்போது, சற்று விரைவாக முடிக்க முடியும். இது சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். சாட்ஜிபிடியை தொழில்ரீதியாக பயன்படுத்தும் யூசர்களுக்கு இது வேலை செய்யலாம்.

இது ஒட்டுமொத்த சாட்ஜிபிடி யூசர்களுக்கும் கிடைக்கிறது. ஆகவே, ஆப் அப்டேட் செய்தால் போதும் பயன்படுத்தி கொள்ளலாம். செட்டிங்ஸ் (Settings) பக்கத்துக்கு சென்று செப்ரெட் மோட் (Separate Mode) விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதேபோல வாய்ஸ் மாடுலேஷனையும் ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் பேசிக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ChatGPT Voice Mode Now Works Inside Chats More Natural What You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X