Home
News

அசத்துறீங்களே அம்பானி.. JioHotstar ஆப்பில் ஒன்றிணைக்கப்பட்ட ChatGPT.. யூசர்களுக்கு என்ன பயன்?

இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டின் (India AI Impact Summit) போது, ​​இந்திய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஹாட்ஸ்டார் ஆனது சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓப்பன்ஏஐ உடனான ஒரு கூட்டணியை அறிவித்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாட்ஜிபிடி அடிப்படையிலான வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அசிஸ்டென்ட் ஆனது ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பில் நேரடியாக ஒருங்கிணைக்கப்படும்.

இந்த கூட்டாண்மையின் மையத்தில், ஓப்பன்ஏஐ ஏபிஐக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி-பவர்டுஇன்டர்பேஸ் உள்ளது என்று ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு செய்திக்குறிப்பில் விளக்கினார். இந்த இரண்டு நிறுவனங்களும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், இதன் கீழ் வரும் மல்டிலிங்குவல் டிக்ஸ்கவரி டூல் ஆனது டெக்ஸ்ட் டூ ஸ்பீச் மற்றும் ஏபிஐ-களுடன் டெக்ஸ்ட் ஜெனரேஷன் திறன்களை இணைத்து, வாய்ஸ் இன்ட்ராக்சன்களை ஆதரிக்கும் என்று நம்பப்படுகிறது.

JioHotstar ஆப்பில் ஒன்றிணைக்கப்பட்ட ChatGPT.. யூசர்களுக்கு என்ன பயன்?

சுருக்கமாக - ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஓப்பன் ஏஐ அந்த 'பன்மொழி அறிவாற்றல் தேடல்' (Multilingual Cognitive Search) என்கிற அம்சத்தை செயல்படுத்தும். இது பயனர்கள் மனநிலை, சூழ்நிலை, ஜேனர் விருப்பம் அல்லது மிகவும் குறிப்பிட்ட சூழ்நிலை உட்பட அவர்களின் நோக்கத்தை எளிமையாக பேசவோ அல்லது டைப் செய்யவோ அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது

மேலும் டிஸ்கவரி டூல் ஆனது சூழல்-விழிப்புணர்வு பரிந்துரைகளையும் உடனடியாக வழங்கும். இந்த ஒருங்கிணைப்பு பல இந்திய மொழிகளில் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் தொடர்புகளை செயல்படுத்தும். ஜியோ ஹாட்ஸ்டார் ஆனது இது குறித்த ஒரு உதாரணத்தையும் வழங்கியது.

"என் பெற்றோர் வருகை தருகிறார்கள், நாங்கள் அனைவரும் ஒன்றாக பார்க்கக்கூடிய ஒன்றை பரிந்துரைக்கிறோம்" அல்லது "நாங்கள் இரட்டையர்கள், ஒரே மாதிரியான இரட்டையர்களை பற்றிய திரைப்படங்களை பார்க்க விரும்புகிறோம்" என்று கூறினால் அதுதொடர்பான பரிந்துரைகள் கிடைக்கும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் விளக்கியது.

சாட்ஜிபிடி-பவர்டு அசிஸ்டென்ட் ஆனது, பயனர்கள் வெளிப்படையாக கேட்பதை பரிந்துரைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் கருத்தில் கொள்ளாத தொடர்புடைய கன்டென்ட்களையும் பரிந்துரைக்கும் என்பதால் இது "என்ன பார்க்க வேண்டும்" என்கிற சிக்கலை சமாளிக்க நிச்சயம் உதவும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளம் கூறுகிறது.

தேவைக்கேற்ப கன்டென்ட் உடன் கூடுதலாக, பன்மொழி கண்டுபிடிப்பு கருவி ஆனது நேரடி விளையாட்டுகளிலும் வேலை செய்யும். ஜியோ ஹாட்ஸ்டார் கூற்றுப்படி, நேரடி போட்டிகளின் போது பயனர்கள் முக்கிய தருணங்கள், வீரர்களின் சிறப்பம்சங்கள், மதிப்பெண்கள் அல்லது சூழல் சார்ந்த நுண்ணறிவுகளை நிகழ்நேரத்தில் உரையாடல் மூலம் கேட்கலாம்.

"பார்வையாளர்கள் பார்ப்பதில் இருந்து கேட்பதற்கும், ஆர்வத்திலிருந்து சூழலுக்கும், ஆய்விலிருந்து பரிந்துரைக்கும் இயற்கையான, தனிப்பட்ட மற்றும் உடனடியாக பயனுள்ளதாக உணரும் வழிகளில் தடையின்றி நகரலாம்" என்று ஓப்பன் ஏஐ ஆப்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ஃபிட்ஜி சிமோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வெளியீடு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரடி மற்றும் தேவைக்கேற்ப அனுபவங்களுடன் தொடங்கும் என்றும், பின்னர் தளம் முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக விரிவடையும் என்றும் ஜியோ ஹாட்ஸ்டார் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது பயனர்களுக்கு 18 மாத இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை (Google AI Pro subscription) வழங்கி வருவதும், இதற்காக கூட்டு கூகுள் (Google) நிறுவனமும், ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸும் (Reliance Intelligence) கூட்டு சேர்ந்துள்ளது என்பதும், இதன் கீழ் ஜியோ பயனர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு (அதாவது 18 மாதங்களுக்கு) கூகுள் ஏஐ ப்ரோவிற்கான இலவச அணுகல் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோ வழங்கும் இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை பெறுவது எப்படி? ஜெமினியின் பிரீமியம் அம்சங்களுக்கான 18 மாத இலவச சந்தாவை பெறுவதற்கு முன், அன்லிமிடெட் 5ஜி திட்டத்தால் ரீசார்ஜ் செய்யப்பட்ட, ஆக்டிவ் ஆக உள்ள ஜியோ சிம் கார்டு உங்களிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இதுதான் கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை பெறுவதற்கான முதல் மற்றும் முக்கிய தகுதியாகும்.

இந்த 2 தகுதிகளையும் (ஜியோ சிம், 5ஜி அன்லிமிடெட் பிளான்) உறுதிசெய்த பின், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மைஜியோ (MyJio) ஆப்பிற்கு செல்லவும். ஒருவேளை உங்களிடம் மைஜியோ ஆப் இல்லை என்றால் அதை பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்யவும்.

Best Mobiles in India

English summary
ChatGPT powered voice and text assistant to integrated directly in JioHotstar app how it works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X