Home
News

புத்தியை காட்டிட்டாங்க.. இனி ChatGPT ஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? எவ்வளவு கட்டணம்?

ChatGPT (சாட்ஜிபிடி) தொடர்பான பல வகையான சர்ச்சைகளுக்கு மத்தியில், கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய சாட்ஜிபிடி வெர்ஷன் தொடர்பான தகவலொன்று வெளியாகியுள்ளது. அதென்ன வெர்ஷன்? அதை பயன்படுத்த எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? இதோ விவரங்கள்:

சாட்ஜிபிடி - இலவசமா அல்லது கட்டணம் செலுத்த வேண்டுமா?

சாட்ஜிபிடி-ஐ முழுக்க முழுக்க இலவசமாக பயன்படுத்தலாம். இருப்பினும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய சாட்ஜிபிடி வெர்ஷன் ஒன்றும் உள்ளது. அது சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus) என்று அழைக்கப்படுகிறது.

இனி ChatGPT ஐ பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? எவ்வளவு கட்டணம்?

சாட்ஜிபிடி பிளஸ்-ஐ பயன்படுத்த எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

சாட்ஜிபிடி பிளஸ் என்கிற பெயிட் வெர்ஷன் (Paid Version) அமெரிக்காவில் அணுக கிடைக்கிறது. இதை பயன்படுத்த மாதத்திற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.1654 கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்த விரும்பாதவர்கள் சாட்ஜிபிடி ஓபன்ஏஐ-யின் இலவச வெர்ஷனில் சைன்-இன் (Sign in) அல்லது லாக்-இன் (Login) செய்யலாம்.

சாட்ஜிபிடி ஓபன்ஏஐ-க்குள் இலவசமாக சைன்-இன் அல்லது லாக்-இன் செய்வது எப்படி?

இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துவது மிகவும் எளிது. இதை உங்கள் மொபைல் ப்ரவுஸர் (Mobile Browser) அல்லது கம்ப்யூட்டர் / லேப்டாப் ப்ரவுஸர் வழியாக அணுகலாம்.

- அதற்கு https://chat.openai.com/auth/login என்கிற லிங்க்-ஐ காப்பி (Copy) செய்து, உங்கள் மொபைல் ப்ரவுஸர் அல்லது வெப் ப்ரவுஸரில் பேஸ்ட் (Paste) செய்யவும்

- பின்னர் தோன்றும் சாட்ஜிபிடி ஓபன்ஏஐ இணையதளத்தில் அணுக கிடைக்கும் சைன்-இன் விருப்பத்தை பயன்படுத்தி, உங்களுக்கான ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கவும். ஏற்கனவே ஒரு அக்கவுண்ட் இருந்தால், அதற்க்குள் லாக்-இன் செய்யவும்.

- இதை செய்ய உங்கள் மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம். நீங்கள் எதை பயன்படுத்துகிறீர்களோ அதன் வழியாகவே உங்கள் அக்கவுண்ட் வெரிஃபிக்கேஷன் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

- வெரிஃபிக்கேஷன் முடிந்ததும், நீங்கள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தத் தொடங்கலாம்; அவ்வளவு தான்!

சாட்ஜிபிடி-யிடம் நீங்கள் என்ன வகையான கேள்விகளை கேட்கலாம்?

கடந்த சில நாட்களாகவே, சாட்ஜிபிடி ஓபன்ஏஐ வழியாக கிடைக்கும் பதில்கள், அதன் பயனாளிகளை (அதாவது கேள்வி கேட்பவர்களை) கடும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

அறியாதோர்களுக்கு.. "நான் உயிர் வாழ விரும்புகிறேன்", என்று சொல்லி பீதியை கிளப்புவது, "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று ஷாக் கொடுப்பது, "உண்மையாகவே என்னை சோதித்து பார்க்க விரும்புகிறாயா?" என்று மிரட்டல் தொனியில் பேசுவது போன்ற வேலைகளை பார்த்து வருகிறது சாட்ஜிபிடி!

இதற்கிடையில், சாட்ஜிபிடி மூலம் சக்தியூட்டப்படும் புதிய பிங் சேர்ச்சிடம் (Bing Search) ஒரு அமர்விற்கு (Session) 5 கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும்; ஒரு நாளைக்கு மொத்தம் 50 கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும் என்கிற புதிய கட்டுப்பாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதாவது சாட்ஜிபிடி-யிடம் ஒருவர் அதிக நேரம் பேசும் போது தான், சர்ச்சைக்குரிய பதில்கள் வெளிவருகிறது என்பதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அப்பட்டமாக ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது!

சாட்ஜிபிடி-யிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்டால் எந்த சிக்கலும் இருக்காது?

- கோடிங் எழுத சொல்லி கேட்கலாம்

- மொழிபெயர்ப்பு செய்யச்சொல்லி கேட்கலாம்

- நீங்கள் எழுதியதில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய சொல்லி கேட்கலாம்

- என்ன பாடல்களை கேட்கலாம் அல்லது என்ன சமைக்கலாம் போன்ற யோசனைகளை பகிரச்சொல்லி கேட்கலாம்

- தேர்வுக்கு தயாராக உதவச்சொல்லி கேட்கலாம்

- உங்கள் பள்ளி அல்லது கல்லூரி விழாவிற்காக கட்டுரை ஒன்றை எழுத சொல்லி கேட்கலாம்

- குறிப்பிட்ட உணவை சமைப்பதற்கான செய்முறையை கேட்கலாம்

- பாடல்களுக்கு வரிகள் எழுத சொல்லி கூட கேட்கலாம் மற்றும் பல.

More from GizBot

Best Mobiles in India

English summary
ChatGPT Plus Paid Version is Not Available in India How to Access and Use ChatGPT for Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X