நான் தான் அப்போவே சொன்னேன்ல.. இப்போ கதறுங்க.. ChatGPT செஞ்ச தில்லாங்கடி.. அடிமடியில் கை வைத்த AI.. உஷார்!
பயந்த மாதிரியே நடந்துருச்சு என்று கூறும்படியாக ஏஐ அடிப்படையிலான ஜெனெரேட்டிவ் சாட்பாட் (Generative AI-based Chatbot) ஆன சாட்ஜிபிடி (ChatGPT) ஒரு "மோசமான" வேலையை பார்த்துள்ளது. பயன்படுத்தியபவர்களின் அடி மடியிலேயே கைவைக்கும் படியாக சாட்ஜிபிடி அப்படி என்ன செய்தது? இதோ விவரங்கள்:
பெரும்பாலான பயனர்கள், மிகவும் எளிமையான கேள்விகளுக்கான பதில்களை (Simple Question and Answers) தேடவே ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துகின்றன. ஆனால் சில பயனர்கள் மிகவும் சிக்கலான பணிகளை (Complex tasks) செய்வதற்காக சாட்ஜிபிடி ப்ளக்இன்ஸ் மற்றும் எக்ஸ்டென்ஷன்களை (Plugins and Extensions) அணுகுகின்றனர்.

ஆரம்பம் முதலே, அதாவது சாட்ஜிபிடி அறிமுகமான நாளில் இருந்தே.. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் (Tech Experts), சாட்ஜிபிடி-யிடம் பகிரும் தரவுகள் / தகவல்கள் (Data / Information) குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்து வருகின்றனர்.
அவர்கள் எச்சரிக்கை விடுத்தது போலவே சாட்ஜிபிடி ஆனது பயனர்களின் ப்ரைவேட் சாட்ஸ் (Private chats) மற்றும் லாக்-இன் விவரங்களை (Login credentials) லீக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஸ்டெக்னிக்காவின் (ArsTechnica) சமீபத்திய அறிக்கையின்படி, சாட்ஜிபிடி பயனர் ஒருவர், சாட்ஜிபிடி ஆனது தனிப்பட்ட உரையாடல்களை எவ்வாறு லீக் (Leak) செய்கிறது என்பதை காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை (Screenshots) பகிர்ந்துள்ளார்.

அந்த ஸ்கிரீன் ஷாட்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் (Username and Passwords) போன்ற விவரங்களை லீக் செய்வதையும் காட்டுகின்றன. தொடர்பில்லாத கேள்விக்காக (Unrelated query) பயனர்கள் சாட்ஜிபிடி-ஐ அணுகியதாகவும், அப்போது பாட்டின் சாட் ஹிஸ்டரியில் (Bot Chat History), பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய.. அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத உரையாடல்களை (Unrelated conversations) கண்டதாகவும், வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.
சாட்ஜிபிடி ஆனது ப்ரைவேட் சாட்ஸ் மற்றும் லாக்-இன் விவரங்களை லீக் செய்தது என்கிற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் அதிகாரிகள் (OpenAI officials), பயனரின் அக்கவுண்ட் ஆனது காம்ப்ரஸைடு (compromised) செய்யப்பட்டுள்ளதால், சாட்ஜிபிடி ஆனது தொடர்பில்லாத சாட் ஹிஸ்டரிகளை காட்டியதாக விளக்கமளித்து உள்ளனர்.

சாட்ஜிபிடி வழியாக தகவல் கசிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சாட்பாட்டில் ஒரு பக் (Bug) இருந்ததாக கூறப்படுகிறது, அது சாட் டைட்டில்களை (Chat titles) லீக் செய்தது. இதற்கிடையில், நவம்பர் 2023 இல், எல்எல்எம் ட்ரெயினிங்கில் (LLM Training) பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட தரவை (Private data) வெளியிடுவதற்கு ஏஐ பாட்டை தூண்டுவதற்காண கேள்விகளை ஆராய்ய்ச்சியாளர்களால் பயன்படுத்த முடிந்தது.
மேலும், ஒப்பன் ஏஐ ஆனது அதன் பயனர்களுக்கு 2எப்ஏ (2FA) போன்ற அம்சங்களை வழங்கவில்லை. அதாவது அவர்களின் சாட்ஜிபிடி அக்கவுண்ட்களை பாதுகாக்க (Safeguard ChatGPT Accounts) தற்போதைய மற்றும் சமீபத்திய லாக்இன்களின் ஐபி லோக்கேஷன் (IP location of current and recent logins) போன்ற விவரங்களை கண்காணிக்கும் திறனை வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








