Home
News

புது ஆஃபர்.. 1 ரூபாய் கூட இல்ல.. 12 மாசம் இலவசம்.. நவ.4 முதல் அமல்.. இந்தியர்களுக்கு ChatGPT Go திட்டம்!

ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் 12 மாதங்களுக்கான சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) சந்தாவை ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் கொடுக்க இருக்கிறது. மாதத்துக்கு ரூ.399 விலை கொண்ட இந்த திட்டத்தை வருடம் முழுவதும் இலவசமாக கொடுக்க இருக்கிறது. இதனால், சாட்ஜிபிடி யூசர்கள் நவம்பர் மாதத்துக்கு காத்து கொண்டிருக்கின்றனர். இந்த திட்டத்தை எப்போது வரை பெற முடியும்? இதில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இந்த சாட்ஜிபிடி கோ ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்குமா? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 4ஆம் தேதியில் இருந்து இந்த சாட்ஜிபிடி கோ திட்டத்தை இலவசமாக பெற்று கொள்ளலாம். இந்த தேதியில் இருந்து புதிதாக பதிவு செய்யவும் (Sign-up) யூசர்களுக்கு கொடுக்க இருக்கிறது. அதேபோல பழைய யூசர்களுக்கும் இந்த சாட்ஜிபிடி கோ திட்டம் இலவசமாக கிடைக்கும். இதுவொரு லிமிடெட் பிரீயட் சலுகையாக இருக்கிறது.

புது ஆஃபர்.. 1 ரூபாய் கூட இல்ல.. 12 மாசம் இலவசம்.. நவ.4 முதல் அமல்!

ஆனால், எப்போது வரை கொடுக்கப்படும் என்பதை ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நவம்பர் 4ஆம் தேதியில் தொடங்குவதால், சாட்ஜிபிடி யூசர்கள் இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர். இது அதிகளவில் புதிய யூசர்களை கொண்டுவர இருப்பதால், ஓப்பன்ஏஐ நிறுவனவம் இதை செய்வது தெரிகிறது. இந்தியாவில் சாட்ஜிபிடி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், இலவமாக கொடுக்கப்படும் வெர்ஷனை மட்டும் யூசர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்களை சாட்ஜிபிடி கோ திட்டத்துக்கு மாற்ற இந்த 12 மாத இலவச சலுகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் சாட்ஜிபிடி கோ திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் களமிறக்கப்பட்டது. இலவச திட்டத்துக்கு அடுத்து மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது.

ஏனென்றால், மாதத்துக்கு ரூ.399 செலவில் கிடைக்கிறது. ஆனால், சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus) திட்டத்தின் விலை மாதத்துக்கு ரூ.1,999ஆகவும், சாட்ஜிபிடி ப்ரோ (ChatGPT Pro) திட்டத்தின் விலை மாதத்துக்கு ரூ.19,900ஆகவும் இருக்கிறது. ஆகவே, ரூ.399 விலை கொண்ட சாட்ஜிபிடி கோ திட்டம் மலிவான விலைக்கு யூசர்களுக்கு கிடைக்கிறது. இதுவே 12 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்க இருக்கிறது.

12 மாதங்களுக்கு இதற்கான தொகையை கணக்கிட்டால், ரூ.4,788ஆக இருக்கிறது. இந்த விலையிலான திட்டத்தை நவம்பர் 4ஆம் தேதியில் இருந்து இலவசமாக பெற்று கொள்ள முடியும். இந்த சாட்ஜிபிடி கோ திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், பிரீமியம் ஏஐ மாடலான ஜிபிடி-5 (GPT-5) வெர்ஷன் கொடுக்கப்படுகிறது. இமேஜ் ஜெனரேஷன் அணுகல் நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல ஃபைல் அப்லோட், அட்வான்ஸ்டு டேட்டா அனாலைசிஸ் மற்றும் பர்சனலைஸ்டு மெமரி ரெஸ்பான்ஸ் போன்ற அணுகல்கள் இதில் கிடைக்கின்றன. மேலும், சாட்ஜிபிடி கோ திட்டமானது, குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் கிடைக்கிறது. இதில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் அதிகமாக இருக்கின்றன.

முன்னதாக, பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா ஒட்டுமொத்த ஏர்டெல் கஸ்டமர்களுக்கும் இலவசமாக கொடுக்கப்பட்டது. இதிலும் 12 மாதங்களுக்கு சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.17,000ஆக இருக்கிறது. அதேபோல கூகுள் நிறுவனமும் ஜெமினி ஏஐ மாடலில் பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகிறது. இப்போது சாட்ஜிபிடி இதில் சேர்ந்துவிட்டது.

12 மாதங்களுக்கு சாட்ஜிபிடி கோ திட்டத்தை கொடுக்கிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகளவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல இன்டர்நெட் பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற மார்கெட்டில் ஏஐ மாடல்களை எளிதில் கொண்டு சேர்க்க டெக் நிறுவனங்கள் இலவசங்களை கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
ChatGPT Go Plan Available Free For One Year To Users in India From November 4 Check OpenAI Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X