அவ்ளோதான் Google Gemini-ஐ முடிச்சிடாங்க! ChatGPT-க்கு வந்த Live Camera.. AI-க்கு கண் கொடுக்கும் விபரீத அம்சம்!
சாட்ஜிபிடியில் (ChatGPT) உள்ள பல அட்வான்ஸ்டு அம்சங்கள் ஏற்கனவே கூகுள் ஜெமினியை (Google Gemini) பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில், ஒப்பன் ஏஐ (OpenAI) நிறுவனமானது இன்னொரு அட்வான்ஸ்டு அம்சத்தை சாட்ஜிபிடியில் அறிமுகம் செய்துள்ளது. இது சற்றே விபரீதமான அம்சமாகவும் தோன்றுகிறது.
அதென்ன அம்சம்? சாட்ஜிபிடியில் அட்வான்ஸ்டு வாய்ஸ் மோட் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் லைவ் கேமரா என்றும் அழைக்கப்படுகிறது. கூடிய விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு வரும் இந்த புதிய லைவ் கேமரா அம்சமானது, சாட்ஜிபிடி-க்கு பார்க்கும் திறனை வழங்கும். அதாவது நிகழ்நேரத்தில் பயனர்களின் சுற்றுப்புறங்களை "பார்க்கவும்", அதனுடன் ஈடுபடவும் அனுமதிக்க உள்ளது.

சாட்ஜிபிடி ஆப்பில் உள்ள கேமரா ஐகானைகிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும். இதை ஆக்டிவேட் செய்ததும், சாட்ஜிபிடி ஏஐ ஆனது உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா வழியாக எதை பார்த்தாலும் அது தொடர்பான கருத்துகளை வழங்கும். பார்க்கும் திறன்களை சேர்ப்பதன் மூலம் சாட்ஜிபிடி ஆல் இப்போது பொருட்களையும் நபர்களையும் அடையாளம் காணவும், பெயர்களை நினைவில் கொள்ளவும், சுற்றுச்சூழலில் உள்ள பொருட்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் முடியும்.
எடுத்துக்காட்டாக, ஜிபிடி4ஓ நிகழ்வின் போது காட்டப்பட்ட ஒரு டெமோவில், சாட்ஜிபிடி ஆனது ஒரு நாயை அடையாளம் கண்டுகொள்வது, அதன் பெயரை நினைவுபடுத்துவது, பந்தை கண்டறிவது, மற்றும் ஃபெட்ச் விளையாட்டை புரிந்துகொள்வது போன்றவைகளை செய்தது. திகிலான விஷயம் என்னவென்றால்.. இது அனைத்தும் எந்தவிதமான இன்புட்டும் இல்லாமல் நடந்ததது.
முன்னரே குறிப்பிட்டபடி, ஜிபிடி4ஓ (GPT4o) வெளியீட்டின் போது அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் அட்வான்ஸ்டு வாய்ஸ் மோட்-ல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சாட்ஜிபிடி இடையேயான இயற்கையான உரையாடல்களை நிகழ்த்த அனுமதிகும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் நம்புகிறது. ஆனால் மேலோட்டமாக பார்பிபதற்கு ஏஐ தொடர்பான பெரிய அளவிலான ஞானம் இல்லாதவர்கள் கூட, இது ஆபத்தான அம்சம் போல தெரிகிறதே என்று கூறுவார்கள்.
கடந்த மாதம் ஓப்பன்ஏஐ நிறுவனம் அதன் சாட்ஜிபிடி சேர்ச்-ஐ (ChatGPT Search) அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. சேர்ச் அட்வெர்டைசிங் (Search Advertising) உலகில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படும் சாட்ஜிபிடி சேர்ச் ஆனது கூகுள் சேர்ச்சிற்கு (Google Search) மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது
ஏனென்றால் சாட்ஜிபிடி சேர்ச் ஆனது ரியல்டைம் வெப் சேர்ச் (Real-time web search) மற்றும் நியூஸ் & டேட்டா வழங்குநர்களுடனான (News and data providers) கூட்டாண்மையின் கீழ் ஒவ்வொரு நிமிடங்களுக்குமான நியூஸ், வெதர், ஸ்டாக் கோட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்கோர் மற்றும் பலவற்றை வழங்கும் திறனை கொண்டுள்ளது.
மேலும் மேம்பட்ட கான்வெர்சேஷனல் ஏஐ திறன்களுடன் (Advanced conversational AI capabilities), வேகமான, துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேர்ச் ரிஸல்ட்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது கூகுள் சேர்ச்சை போல் எளிமையான லிங்க்களை வழங்குவதற்கு பதிலாக நுணுக்கமான பதில்களையும் வழங்குகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாட்ஜிபிடி-4 வெர்ஷனை (ChatGPT-4 Version) விட 100 மடங்கு சக்திவாய்ந்த ஓரியன் ஏஐ (Orion AI) வருகிற டிசம்பர் 2024 இல் அறிமுகமாகும் என்பதையும் ஓப்பன் ஏஐ நிறுவனம் உருத்திப்படுத்தி உள்ளது. ஓரியன் ஏஐ என்கிற பெயர் சாட்ஜிபிடி 5-க்கான (ChatGPT-5) மாற்றாக தெரிகிறது
இதன் மூலம் ஓரியன் ஏஐ ஆனது ஓப்பன்ஏஐ நிறுவனத்துடன் உடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்பதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது ஓரியன் ஏஐ ஆனது ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-3 மாடல்களை போல அனைவருக்கும் கிடைக்காது!


Click it and Unblock the Notifications








