அக்கவுண்ட்ஸ் மாணவர்களிடம் மண்ணை கவ்விய ChatGPT.. நீ மேக்ஸ்ல வீக்கா?
அமெரிக்காவில் ஆய்வுக்காக நடத்தப்பட்ட கணக்கியல் தேர்வில் (Accounts Exam) சாட்ஜிபிடி (ChatGPT) தரமான சம்பவத்தில் சிக்கி உள்ளது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை (Artificial Intelligence) அக்கவுண்ட்ஸ் மாணவர்கள் கதற விட்டுள்ளனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி.
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடி பேச்சாகவே இருக்கிறது. மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் அதிவேகமாக பிரபலம் அடைந்துள்ளது. சொல்லப்போனால், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைகழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் வரை சாட்ஜிபிடியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் சாட்போட் (Chatbot) மூலம் பயனர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. எந்த துறையில் இருந்து எந்த கேள்வியை கேட்டாலும் சாட்ஜிபிடி ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களை வைத்திருக்கிறது. கவிதை எழுதுவது முதல் கம்ப்யூட்டர் கோடிங் எழுவது வரை சாட்ஜிபிடியின் சாட்போட் அசத்துகிறது. இந்த சாட்ஜிபிடியின் வரவால் அனைத்து டெக் நிறுவனங்களும் கதிகலங்கிவிட்டன.
ஏன் கூகுள் போன்ற பல்வேறு பெரும் நிறுவனங்களே, இதே போல தங்களுக்கென ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்போடை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட தொடங்கிவிட்டன. அந்த அளவுக்கு சாட்ஜிபிடி வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும், பல்வேறு தரப்பினர் சாட்ஜிபிடியை குறைந்து மதிப்பிடுகின்றனர். மனித மூளையை பயன்படுத்துவதே சிறந்தது, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எதிர்காலத்தில் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர்.
இதற்கேற்றார்போல சாட்ஜிபிடியிலும் பல்வேறு குறைகள் உள்ளன. இதனால் கணிதம் (Maths), அறிவியல் (Science), ஸ்பேஸ் (Space) போன்ற பல்வேறு துறைகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்க முடிவதில்லை. அந்த வகையில் அக்கவுண்ட்ஸ் துறையிலும் மண்ணை கவ்வி உள்ளது. அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் யுனிவர்சிட்டியின் ( American Association of University ) கீழ் செயல்படும் அமெரிக்கன் அக்கவுண்டிங் அசோசியேஷன் ( American Accounting Association ) மூலம் பல்கலைகழக மாணவர்களுக்கும் சாட்ஜிபிடிக்கும் இடையே தேர்வு வைக்கப்பட்டது.
இதில் உலகம் முழுவதும் 187 பல்கலைகழகங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஆடிட் (Audit), பைனான்ஸ் (Finance), மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் & டேக்ஸ் (Management Accounting and Tax) பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியில் மாணவர்கள் 76.7% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆனால், சாட்ஜிபிடி வெறும் 47.4% மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது.
இருப்பினும், மாணவர்கள் எடுத்துக் கொண்ட நேரத்தை விட சாட்ஜிபிடி விரைவாக அனைத்து கணக்கியல்களையும் போட்டு முடித்தது தங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியதாக அமெரிக்கன் அக்கவுண்டிங் அசோசியேஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு கேள்விகளுக்கு சாட்ஜிபிடியிடம் முழுமையான பதில்கள் கிடையாது. இருந்தாலும், வரும் காலங்களில் அடுத்தடுத்த அப்டேட்களுக்குப் பின் சாட்ஜிபிடியை யாராலும் வெல்ல முடியாது என்று ஓப்பன் ஏஐ நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் சாட்ஜிபிடியை 10 கோடிக்கும் அதிகமானோர் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ளீடு செய்யப்படும் டேட்டாக்களை சாட்ஜிபிடி சேமித்துக் கொள்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்களுக்கென தனிப்பட்ட தகவல்கள் இருக்காது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதோடு மக்களிடையே சாட்ஜிபிடி சேம்பேறிதனத்தையும் அதிகரிக்கும் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








