சுத்தம்.. சந்தா பணம் கேட்ட சில நாட்களில் இந்த நிலைமையா? 1 மணிநேரம் சுருண்டு போன ChatGPT.. என்ன நடந்தது?
இன்று (மார்ச் 20) மதியம் கிட்டத்தட்ட 1 மணி நேர செயலிழப்பில் இருந்த சாட்ஜிபிடி (ChatGPT) மீண்டும் ஆன்லைனிற்கு வந்துள்ளது. குறிப்பிட்ட செயலிழப்பின் போது உலகம் முழுவதும் உள்ள பயனர்களால் இந்த ஏஐ சாட்பாட்டை (AI Chatbot) பயன்படுத்த முடியாமல் போனது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
செயல் இழப்பிற்கு என்ன காரணம்? செயலிழப்புகளை சந்திக்கும் வலைதளங்களை / சேவைகளை கண்காணிக்கும் டவுன் டிடெக்டரின் (Down Detector) கூற்றுப்படி, இந்திய நேரப்படி மதியம் 2.15 மணி முதலே சாட்ஜிபிடி 'டவுன்' (ChatGPT Down) ஆகியுள்ளது. இருப்பினும் இந்த செயலிழப்பிற்கான காரணம் என்ன என்பது பற்றிய தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

சாட்ஜிபிடி பயனர்கள் என்ன சொல்கிறார்கள்? இது தொடர்பாக புகாரளித்தவர்களில், 82 சதவீதம் பேர் சாட்ஜிபிடி சரியாக வேலை செய்யவில்லை (ChatGPT Down) என்றும், 11 சதவீதம் பேர் லாக்-இன் (Log in) சிக்கல்களை சந்தித்ததாகவும் மற்றும் 7 சதவீதம் பேர் சாட்ஜிபிடி இணையதளத்தில் (ChatGPT Website) சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
சந்தா விலையை அறிவித்த சில நாட்களில் வந்த சிக்கல்! புதிய சாட்ஜிபிடி 4 வெர்ஷனை (ChatGPT 4 Version) உள்ளடக்கிய சாட்ஜிபிடி பிளஸின் (ChatGPT Plus) இந்திய சந்தா விலை (Subscription Price in India) அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்கு பிறகு சாட்ஜிபிடி செயல் இழந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சாட்ஜிபிடி பிளஸின் சந்தா கட்டணம் எவ்வளவு? சமீபத்தில் ஒப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் அதன் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட் (Artificial Intelligence Chatbot) ஆன சாட்ஜிபிடி-யின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்திருந்தது. அது சாட்ஜிபிடி 4 (ChatGPT 4) என்று அழைக்கப்படுகிறது.
புதிய திறன்கள் மற்றும் அம்சங்களுடன் வரும் சாட்ஜிபிடி-4 வெர்ஷன், பணம் கொடுப்பதன் வழியாக அணுகலை வழங்கும் சாட்ஜிபிடி பிளஸ் என்கிற கட்டண சேவையின் கீழ் மட்டுமே அணுக கிடைக்கிறது. சமீபத்தில், இந்தியாவில் சாட்ஜிபிடி பிளஸை பயன்படுத்துவதற்கான சந்தா கட்டணம் எவ்வளவு என்றும் அறிவிக்கப்பட்டது.
ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் கூற்றுப்படி, சாட்ஜிபிடி பிளஸ்-ஐ பயன்படுத்த விரும்புபவர்கள் 20 டாலர்கள் என்கிற மாதாந்திர சந்தா கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.1,650-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். அப்போது தான் சாட்ஜிபிடி பிளஸின் கீழ் கிடைக்கும் சாட்ஜிபிடி 4-இன் பலன்களை அனுபவிக்க முடியும்.
3 முக்கிய சலுகைகளையும் கிடைக்கும்: சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்களுக்கு, இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்காத 3 முக்கிய சலுகைகளும் (Benefits) கிடைக்கும். முதலாவதாக, சாட்ஜிபிடி-க்கான டிமாண்ட் அதிகமாக இருந்தாலும் கூட பணம் கொடுக்கும் சந்தாதாரர்களால் சாட்ஜிபிடி-ஐ எளிமையாக அக்செஸ் (Access) செய்ய முடியும்.
இரண்டாவதாக, சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்களுக்கு மிகவும் வேகமான ரெஸ்பான்ஸ் (Response) கிடைக்கும். மூன்றாவதாக சாட்ஜிபிடி-யில் ஏதேனும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டால், அதை பயன்படுத்தி பார்ப்பதற்கான முன்னுரிமை (Priority access) பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும்.
சாட்ஜிபிடி-ஐ தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த விரும்புபவர்கள், அதை மைக்ரோசாஃப்ட்டின் பிங் சேர்ச் (Microsoft Bing Search) வழியாக அணுகலாம். நினைவூட்டும் வண்ணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் விண்டோஸ் 11 (Windows 11) அப்டேட் வழியாக சாட்ஜிபிடி-ஆல் இயங்கும் பிங்-ஐ சேர்த்தது!


Click it and Unblock the Notifications








