Home
News

காசு கொட்டி கொடுத்து.. ChatGPT விஞ்ஞானியை வளைச்சு போட்ட மார்க்.. Meta-வில் முக்கிய பொறுப்பு.. யார் அவர்?

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தலைமையின் கீழ் இயங்கும் மெட்டா (Meta) நிறுவனம் ஆனது அட்வான்ஸ்டு ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் (Advanced artificial intelligence - Advanced AI) தனது முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கத்தின் கீழ் ஒரு உருப்படியான வேலையை பார்த்து உள்ளது.

சாட்ஜிபிடியின் கோ-கிரியேட்டர் (Co-creator of ChatGPT) ஆன ஷெங்ஜியா ஜாவோவை (Shengjia Zhao) அதன் சூப்பர் இன்டலிஜென்ஸ் லேப்பின் தலைமை விஞ்ஞானியாக (Chief scientist of Superintelligence Lab) நியமித்து உள்ளதாக மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் சிஇஓ (Meta Platforms CEO) ஆன மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்து உள்ளார்.

ChatGPT விஞ்ஞானியை வளைச்சு போட்ட மார்க்!

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி விஞ்ஞானியான ஜாவோ, சாட்ஜிபிடி (ChatGPT), ஜிபிடி 4 (GPT 4) மற்றும் ஜிபிடி 4.1 (GPT 4.1) மற்றும் ஓ3 (O3) உட்பட ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் பல மினி மாடல்களை (Mini Model) இணைந்து உருவாக்கி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பொறுப்பில், ஷெங்ஜியா என்னுடனும் அலெக்ஸுடனும் நேரடியாக பணியாற்றி எங்கள் புதிய ஆய்வகத்திற்கான ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரலையும், அறிவியல் திசையையும் அமைப்பார் என்று மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு த்ரெட்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மெட்டாவின் தலைமை ஏஐ அதிகாரி ஆன அலெக்ஸாண்ட்ரா வாங்கை, ஸ்டார்ட்அப் ஸ்கேல் ஏஐ-யில் பணியமர்த்தியதையும் மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய வாரங்களில் ஓப்பன்ஏஐ நிறுவனத்திலிருந்து மெட்டா நிறுவனத்திற்கு மாறிய பல ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதறகாக மெட்டா நிறுவனம் ஆனது சிறந்த ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்காக சிலிக்கான் வேலியின் மிகவும் இலாபகரமான ஊதிய தொகுப்புகள் மற்றும் அற்புதமான தொடக்க ஒப்பந்தங்களை வழங்கி வருகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கூகுள் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிற்கும் போட்டி நடக்கிறது. டீப் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டெமிஸ் ஹசாபிஸ், கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஆன சுந்தர் பிச்சையின் "சாத்தியமான மாற்றாக" இருக்கலாம் என சில கூகுள் ஊழியர்கள் நம்புகிறார்கள்.

பிஸ்னஸ் இன்ஸைடரில் (Business Insider) வெளியான ஒரு அறிக்கை, சமீபத்திய ஆண்டுகளில் ஹசாபிஸின் விரைவான வளர்ச்சி சுந்தர் பிச்சையின் "உச்சக்கட்ட பயணத்தை" போன்ற ஒரு முறையைப் பின்பற்றிவதாக கூறுகிறது. "அவரது உயர்வு எனக்கு சுந்தரின் எழுச்சியை நினைவூட்டுகிறது" என்று ஹசாபிஸ் மற்றும் சுந்தர் பிச்சையுடன் நெருக்கமாக பணியாற்றிய நீண்டகால கூகுள் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்

மேலும் அவர் "திடீரென்று, நீங்கள் சுந்தர் என்ற பெயரை அடிக்கடி கேட்க தொடங்கினீர்கள், மேலும் அவருக்கு பல பொறுப்புகள் கிடைத்தது. திடீரென்று, அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறினார்" என்றும் அவர் கூறியுள்ளார். டெமிஸின் எழுச்சியும் இதேபோன்றது தான். இப்போது திடீரென்று, கூகுளில் தற்போது மிக முக்கியமான குழுவான டீப் மைண்டிற்கு இப்போது அவர் தான் பொறுப்பு என்றும் அந்த கூகுள் ஊழியர் கூறியுள்ளார்.

மறுகையில் உள்ள ஓப்பன் ஏஐ நிறுவனம் ஆனது யார் போனார்கள் யார் வந்தார்கள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது. அதன் அடுத்த ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மாடல் (Artificial Intelligence Model - AI Model) ஆன சாட்ஜிபிடி 5 (ChatGPT 5) வெர்ஷனை 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிடைக்கப்பட்ட தகவலின் படி, சாட்ஜிபிடி 5 மாடல் ஆனது பேஸ் வேரியண்ட் (Base), நானோ வேரியண்ட் (Nano) மற்றும் மினி வேரியண்ட் (Mini) என மொத்தம் 3 வகைகளில் வெளியாகும். இது ஜிபிடி-சீரிஸ் மற்றும் ஓ-சீரிஸ் இரண்டையும் ஒன்றிணைத்து, சொந்த பகுத்தறிவு திறன் கொண்ட ஒருங்கிணைந்த மாடல் ஆக வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ChatGPT Co Creator Shengjia Zhao Named As Chief Scientist in Meta Superintelligence Lab
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X