"நேற்று வந்த பையன்" வரலாறு படைக்கும் ChatGPT! அடுத்தடுத்து உடைக்கப்படும் சாதனைகள்!

|

மிகவும் பிரபல பயன்பாடான இன்ஸ்டாகிராம், ஸ்பாடிஃபை, டிக்டாக் போன்ற பயன்பாடுகள் 2 ஆண்டுகளில் படைத்த சாதனைகளை ChatGPT இப்போதே செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உச்சக்கட்ட வளர்ச்சியை நோக்கி ChatGPT

ChatGPT என்பது உலகில் வேகமாக வளர்ந்து வரும் செயலியாக இருக்கிறது. இதுபோன்ற ஏணைய பயன்பாடுகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதன் அறிமுகத்தின் போது பிரபலமாக இருந்திருக்கிறது. அதன்படி தான் தற்போது சாட்ஜிபிடி இருக்கிறது என்றாலும் இதன் வளர்ச்சி என்பது இதுவரை எந்த பயன்பாடும் கண்டிராத வகையில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து சாதனையையும் முறியடித்த சாட்ஜிபிடி

சாட்ஜிபிடி பயன்பாடானது நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இது அறிமுகமான 5 நாட்களில் 1 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றது. தொடர்ந்த ஜனவரி மாதத்தில் இந்த பயன்பாடு 13 மில்லியன் பயனர்களை பெற்றது. இன்ஸ்டாகிராம், ஸ்பாடிஃபை மற்றும் டிக்டோக் போன்ற நிறுவனங்கள் படைத்த அனைத்து சாதனையையும் தற்போது சாட்ஜிபிடி முறியடித்து இருக்கிறது.

100 மில்லியன் பயனர்கள்

UBS ஆய்வாளர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ளதாக கூறப்பட்ட தகவலின்படி, OpenAI மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT, இதுவரை எந்த பயன்பாடும் கண்டிராத வேகத்தில் வளர்ந்து வருகிறது. டிக்டாக் பயன்பாடு ஒன்பது மாதங்களில் 100 மில்லியன் பயனர்களை பெற்றது. அதேபோல் இன்ஸ்டாகிராம் 2.5 ஆண்டுகளில் 100 மில்லியனை எட்டியது. இதுவரை இதுவே சாதனையாக இருந்த நிலையில் தற்போது சாட்ஜிபிடி இரண்டு மாதங்களில் மொத்த பயனர்களின் எண்ணிக்கை 100 மில்லயனை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பகுப்பாய்வு நிறுவனமான SimilarWeb-ம் ஜனவரி மாதத்தில் "சாட்ஜிபிடி" அதிவேக வளர்ச்சியை கண்டதாக குறிப்பிட்டுள்ளது.

சாட்ஜிபிடி ஆரம்பகால வளர்ச்சி

அறிமுகமான ஆரம்ப காலத்தில் எந்த ஒரு பயன்பாடும் கண்டிறாத வளர்ச்சியை சாட்ஜிபிடி கண்டிருக்கிறது. 1 மில்லியன் பதிவிறக்கம் பெற பிரபல பயன்பாடுகள் குறைந்தபட்சமாக எடுத்துக் கொண்ட நேரம் இதோ.

Netflix- 3.5 வருடம்

பேஸ்புக்- 10 மாதம்

ஸ்பாடிஃபை- 5 மாதம்

இன்ஸ்டாகிராம்-2.5 மாதம்

சாட்ஜிபிடி- 5 நாட்கள்

அதாவது சாட்ஜிபிடி இதுவரை பிற பயன்பாடுகள் படைத்த அனைத்து சாதனையையும் முறியடித்து இருக்கிறது.

வியப்பில் உள்ள டெக் உலகம்

அதேபோல் இன்ஸ்டாகிராம் 100 மில்லியன் பயனர்களை பெற சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்ததாக சென்சார் டவர் அறிக்கை கூறுகிறது. அதேபோல் ஷார்ட் வீடியோ தளமான டிக்டாக், அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு 100 மில்லியன் பயனர்களை சுமார் ஒன்பது மாதங்களில் பெற்றது. ஆனால் இந்த அனைத்து சாதனைகளையும் சாட்ஜிபிடி தற்போது முறியடித்து இருக்கிறது. சுமார் இரண்டு மாதங்களில் 100 மில்லியன் பயனர்களை சாட்ஜிபிடி எட்டியதாக கூறப்படுகிறது. சாட்ஜிபிடி வளர்ச்சியை கண்டு டெக் நிபுணர்களே வியப்படைந்து வருகின்றனர்.

கூகுள் கில்லர்

ChatGPT ஆனது கூகுளை இரண்டே ஆண்டுகளில் அழித்துவிடும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ChatGPT பயன்பாட்டை கூகுள் கில்லர் எனவும் கூகுளுக்கு இணை மாற்று வந்து விட்டது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்கள் எது தொடர்பான கேள்வியை எழுப்பினாலும் சாட்ஜிபிடி அதற்கு செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பம் மூலமாக பதிலளிக்கும்.

OpenAI மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT

ChatGPT என்பது OpenAI மூலம் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட பயன்பாடு ஆகும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இது செயற்கை நுண்ணறிவு மூலம் விரைவாக பதில் சொல்லும். அதேபோல் சாட்ஜிபிடி மூலமாக மெயில்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதலாம். ChatGPT என்பது "ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்" என்ற தொழில்நுட்பத்தை குறிக்கிறது. எளிதாக இதன் பயன்பாட்டை கூற வேண்டும் என்றால், சாட்ஜிபிடி உடனான உரையாடல் ஒரு நிபுணரிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

Best Mobiles in India

English summary
ChatGPT Broke Records that Instagram, Spotify, TikTok Couldn't! Do You Know the Reason For this Growth?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X