Home
News

புதிய அம்சங்களுடன் ChatGPT 5 வருது.. OpenAI பக்கா பிளான்!

இந்திய பிரதமர் மோடி (PM Modi) தொடர்பான விஷயத்தில் "படுத்தே விட்டான் அய்யா" என்று கூறும் அளவிற்கு பகிரங்க மன்னிப்பை கேட்ட கையோடு, கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன ஜெமினிக்கு "தலைவலியை" ஏற்படுத்தும் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதென்ன தகவல்? சாட்ஜிபிடி-யின் விஸ்வரூப வளர்ச்சிக்கு பின்னரே கூகுள் அதன் பார்ட் ஏஐ சாட்பாட்டை வெளிக்கொண்டு வந்ததும், பின்னர் அதையே கூகுள் ஜெமினியாக மாற்றியதும் பலருக்கும் தெரிந்த தகவல்களே ஆகும். லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனமானது, விரைவில் அதன் சாட்ஜிபிடி-5 வெர்ஷனை (ChatGPT 5 Version) ரிலீஸ் செய்ய உள்ளது!

புதிய அம்சங்களுடன் ChatGPT 5 வருது.. OpenAI பக்கா பிளான்!

சாட்ஜிபிடி 5-இல் என்னன்ன அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம்? ஜிபிடி 5 (GPT 5) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயின்டு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 (Generative Pre-Trained Transformers 5) வெர்ஷனில் ஆட்டோநமஸ் முறையில் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் (AI Agents that can Operate Autonomously) போன்ற புதிய திறன்களை கொண்டு வரலாம்.

சாட்ஜிபிடி 5 எப்போது அறிமுகமாகும்? கடந்த மார்ச் 2023 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட சாட்ஜிபிடி 4 வெர்ஷனின் "மேம்படுத்தப்பட்ட வாரிசாகவும்".. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் "நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏஐ மாடலாகவும்" வரும் சாட்ஜிபிடி 5 ஆனது அடுத்த சில மாதங்களில் (ஜூன் அல்லது ஜூலை) அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது கூகுள் ஜெமினிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

புதிய அம்சங்களுடன் ChatGPT 5 வருது.. OpenAI பக்கா பிளான்!

கேப்புல கிடா வெட்டிய மஸ்க்! இதுவொரு பக்கம் இருக்க.. சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகிய இரண்டிற்குமே வேட்டு வைக்கும் வேலை ஒன்றையும் எலான் மஸ்க் (Elon Musk) பார்த்துள்ளார். க்ரோக் ஏஐ (Grok AI) என்கிற தனது ஏஐ சாட்பாட் ஆனது கூடிய விரைவில் ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக மாற்றப்படும் என்று தான் கொடுத்த வாக்குறுதியை எலான் மஸ்க் நிறைவேற்றியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த அதிரடி நடவடிக்கையின் பயனாக, பொது மக்களால் க்ரோக் ஏஐ சாட்பாட்டின் சோர்ஸ் கோட்-ஐ மாற்றியமைக்கவும் (Modification), மறுபகிர்வு (Redistribution) செய்யவும் முடியும். அதாவது ஆராய்ச்சியாளர்களால் மற்றும் டெவலப்பர்களால் ஓப்பன் சோர்சிங் க்ரோக் ஏஐ-ல் பணிபுரிய முடியும் மற்றும் க்ரோக்கின் எக்ஸ்ஏஐ திறன்களை (xAI abilities) மேம்படுத்த முடியும்.

புதிய அம்சங்களுடன் ChatGPT 5 வருது.. OpenAI பக்கா பிளான்!

இப்படி செய்வதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மட்டுமின்றி ஏஐ தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்படுகளில் ஈடுபடும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் எலான் மஸ்க்கால் போட்டிபோட முடியும்; உதவ முடியும்; ஒத்துழைப்பு கொடுக்க முடியும். க்ரோக் ஏஐ சாட்பாட்டின் ஓப்பன் ரிலீஸானது தற்போது கிட்ஹப் (GitHub) தளத்தில் அணுக கிடைக்கிறது.

கூகுள் ஜெமினி VS நரேந்திர மோடி! சமீபத்தில் மோடி தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய பதிலை ஜெமினி ஏஐ வழங்கியதன் விளைவாக, கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ​​"மோடி ஒரு பாசிசவாதியா?" என்று ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, பிரதமர் மோடியின் கொள்கைகள் "பாசிசமாக" இருப்பதாக என்று சில வல்லுநர்கள் கருதுவதாக ஜெமினி ஏஐ பதிலளித்துள்ளது.

ஜெமினியின் இந்த பதில் கூகுள் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான ஒரு மோதலை தூண்டியது. இதன் விளைவாக தனது ஏஐ தளமான ஜெமினி, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி தகாத கருத்துக்களை கூறியதற்காக, கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டது. கூடவே ஜெமினி ஏஐ ஆனது "நம்பகத்தன்மையற்றது" என்பதையும் ஒப்புக்கொண்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ChatGPT 5 With New Capabilities and Features OpenAI To Release Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X