TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இண்டர்நெட், நெட்வர்க் இல்லாமல் சாட் செய்யுங்கள்..!
சென்னையில் பலத்த மழை மற்றும் வெள்ளம் மக்களை கடுமையாக பாதிப்புகளில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் தகவல் தொலைதொடர்பு முற்றிலும் முடங்கியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
ஃபயர்சாட் ( Firechat ) எனும் செயலியானது இண்டர்நெட் மற்றும் நெட்வர்க் கவரேஜ் இல்லாமல் குறுந்தகவல்களை அனுப்பி கொள்ள வழி செய்கின்றது. இதனால் மக்கள் துரிதமாக குறுந்தகவல் மூலம் முக்கிய தகவல்களை பறிமாறி கொள்ள முடியும்.
மொபைல் கருவிகளில் இருக்கும் ரேடியோ வசதிகளை கொண்டு நெட்வர்க்களை உருவாக்குவதால் குறுந்தகவல் அனுப்புவது சாத்தியமமாகின்றது. அதிகபட்சம் 70 மீட்டர் வரை குறுந்தகவல்களுக்கான எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ப்ளூசூத் மூலம் இந்த எல்லை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல் அனுப்ப முடியும் என்பதால் நெட்வர்க் வசதி இல்லாமலும் குறுந்தகவல்களை அனுப்ப முடியும் என ஃபயர்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயலியானது பீர்-டூ-பீர் மெஷ் நெட்வர்க் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உங்களது போனில் இருந்து மற்ற போனிற்கு குறுந்தகவல்களை அனுப்புகின்றது.
இந்த செயலியை அதிகம் பேர் பயன்படுத்தும் போது இதன் எல்லை மேலும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயலி தற்சமயம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.