முதல் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யும் மையம் இந்தியாவில் அறிமுகம்.!
2030 க்குள் அணைத்து வாகனங்களையும் பேட்டரி மயம் ஆகிடவேண்டும் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
2030 க்குள் அணைத்து வாகனங்களையும் பேட்டரி மயம் ஆகிடவேண்டும் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக முதல் பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் துவங்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மையத்தை மஹாராஷ்ட்ரா பவர் நிறுவனம் தொடங்கியுள்ளது. லோனோவாலா பகுதியிலுள்ள ஓட்டல் சென்டர் பாயிண்டில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நிறுவப்பட்ட இந்த சார்ஜிங் மையத்தைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் மாதத்தில் குறைந்தது 50 சார்ஜிங் மையங்களாவது நிறுவப்படுமென்று மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
2020 க்குள் மாநிலம் முழுவதும் சுமார் 500 மையங்களை திறக்கவிருப்பதாகவும் மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பேட்டரி கார்கள், பேட்டரி ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினை மக்கள் விரைவில் நடைமுறைப் படுத்த உதவ வேண்டும் என்றும் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேட்டரிக்கு சார்ஜிங் செய்வதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்தி கொள்ளலாம். இதற்காகப் பிரத்தியேக செயலியையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. "சார்ஜ் இன்" செயலி மூலம் அருகிலுள்ள அடுத்த பேட்டரி சார்ஜிங் மையம் பற்றிய தகவல்களையும் எளிதில் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications