Samsung போன் பேட்டரி மட்டும் எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு? இந்த 3 செட்டிங் தான் காரணம்.. உடனே மாற்றுங்கள்
ஸ்மார்ட்போன்கள் பழையதாக மாறமாற அதன் பேட்டரி (Battery) சிதையத் தொடங்குகிறது. இதன் விளைவாக உங்கள் போனின் சார்ஜ் (phone charge) வேகமாக தீர்ந்துவிடுகிறது அல்லது பேட்டரி நிலைத்து நிற்காமல் விரைந்து குறைந்துக் கொண்டே இருக்கிறது. சாம்சங் போனில் மட்டும் இது அதிகமாக நடப்பதில்லை.
காரணம், சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் பயனர்களுக்கு மட்டும் 3 பிரத்தியேகமான பேட்டரி செட்டிங்கை (3 unique battery settings for samsung mobile) வழங்குகிறது. இதன் மூலம் பேட்டரியின் சார்ஜிங் (battery charging) திறன் மற்றும் பேட்டரி பேக்கப் (battery backup) திறன் பாதுகாக்கப்படுகிறது. பேட்டரி சிதைவதை இந்த செட்டிங்கள் தாமதப்படுத்துகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர் (Samsung smartphone users) என்றால், உடனே உங்கள் போனில் இந்த 3 செட்டிங்கை ஆக்டிவேட் செய்துவிடுங்கள். நீங்கள் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் (tablet) பயனராக இருந்தால், இதோ இந்த மூன்று செட்டிங்கை உடனே இயக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இது உங்கள் சாம்சங் (Samsung) இல் ஏற்படும் பேட்டரி சிதைவை மெதுவாக்க உதவுகிறது.
1. ப்ரொடெக்ட் பேட்டரி அம்சம் (Protect Battery Feature):
உங்கள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யவோ அல்லது முழுமையாக டிஸ்சார்ஜ் செய்யவோ கூடாது. உங்கள் சாதனத்தை எப்போதும் 85 சதவீதம் வரை மட்டும் சார்ஜ் செய்தால், பேட்டரி ஆயுளை நீட்டிக்கலாம். இதை கைமுறையாக கண்காணிப்பது கடினம் என்பதனால், சாம்சங் ஒரு விற்பதை வழங்குகிறது.
இது பேட்டரி 85 சதவீதத்திற்கு சார்ஜ் ஆகும் போது தானாகவே சார்ஜ் செய்வதை நிறுத்துகிறது. இதை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் Settings > Battery > Protect Battery என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இது உங்கள் ஸ்மார்ட்ஃபோனை 85 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்யாமல் பாதுகாக்கிறது.
2. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆஃப் செய்யுங்கள் (Disable Fast Charging):
பாஸ்ட் சார்ஜ் செய்வது வெப்பத்திற்கு வழிவகுக்கிறது. இது நீண்ட காலத்திற்கு பேட்டரியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சாம்சங் ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜ் செய்வதை முடக்குவதன் மூலம், சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பத்தைத் தடுக்கலாம். இது பேட்டரியின் ஆரோக்கியத்தை நீட்டிக்கும். வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்கிற்கும் இது பொருந்தும். உடனே Settings > Battery > Charging Settings சென்று Fast charging அம்சத்தை ஆஃப் (OFF) செய்யுங்கள்.
3. பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஸ்லீப் மோடில் வைக்கவும் (Put unused apps to sleep):
பல பயன்பாடுகள் பின்னணியில் இயங்குகின்றன. நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாவிட்டாலும், அவை பேட்டரியின் ஆற்றலைச் செலவழிக்கின்றன. பயன்படுத்தப்படாத பயன்பாடுகளை ஸ்லீப் செய்ய வைப்பதன் மூலம், பவர் வீணாகாமல் தடுக்கலாம். இதை தானாக செய்து முடிக்க உடனே உங்கள் போனில் Setting > Battery > Background usage limit > Put unused apps to sleep என்ற அம்சத்தை ஆக்டிவேட் செய்யவும். இந்த 3 அம்சங்களும் உங்கள் போனின் பேட்டரி ஆயுளை பாதுகாக்க உதவுகிறது.


Click it and Unblock the Notifications








