Home
News

ISRO மகா மாஸ்.. சந்திரயான்-4 நிலவில் எங்கு தரையிறங்க போகிறது? முதல் முறையாக Chandrayaan-4 இல் 2 ராக்கெட்-ஆ?

இஸ்ரோவின் அடுத்த கனவு திட்டமான சந்திரயான்-4 (Chandrayaan-4), நிலவில் எந்த பகுதியில் தரையிறங்க போகிறதென்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக இஸ்ரோ (ISRO) இந்த முறை 2 ராக்கெட்களை இந்த திட்டத்திற்காக விண்ணில் ஏவவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

நிலவு மண் (Lunar soil) மற்றும் பாறைகளை (Lunar rocks samples) இந்தியாவிற்கு விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு (Earth) கொண்டு வரும் ஒரு முக்கியமான திட்டம் தான் இந்த சந்திரயான்-4 திட்டம் (Chandrayaan-4 mission). இந்த நோக்கத்திற்காகவே இஸ்ரோ இந்த சந்திரயான்-4 திட்டத்தை 2 ராக்கெட்களை கொண்டு உருவாக்கியுள்ளது. ஆம் மக்களே, இஸ்ரோவின் அடுத்த சந்திரயான் திட்டத்தில் ஒன்றல்ல, மொத்தம் இரண்டு ராக்கெட்கள் இருக்க போகிறது.

ISRO மகா மாஸ்.. சந்திரயான்-4 நிலவில் எங்கு தரையிறங்க போகிறது?

சந்திரயான்-4 திட்டம் நிலவில் எங்கு தரையிறங்க போகிறது? (Chandrayaan-4 mission Landing Spot On Moon):

சந்திரயான்-4 திட்டம் இரண்டு ராக்கெட்களை (Chandrayaan-4 with 2 rockets) கொண்டிருக்கும் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் நிலவு நோக்கி பாயும் விண்கலம், இந்த முறை நிலவில் எந்த பகுதியில் தரையிறங்கும் என்ற தகவலை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, சந்திரயான்-4 மிஷன் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள சிவசக்தி (Shiv Shakti) புள்ளிக்கு அருகில் தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (Space Applications Centre - SAC) இயக்குனர் நிலேஷ் தேசாய் வெளியிட்டிருக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) எதிர்கால நிலவு ஆய்வுத் திட்டங்கள் குறித்து தேசாய் சமீபத்தில் அளித்த விளக்கத்தின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அதேபோல், இந்த 4வது மூன் மிஷனில் (4th moon mission) 5 பெலோட்களை இஸ்ரோ (5 payload chandrayaan-4) பயன்படுத்தவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தெரியாதவர்களுக்கு, கடந்த சந்திரயான்-3 மிஷனில் இஸ்ரோ 3 பெலோட்களை பயன்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கம் மிகவும் பெரியது என்பதனால், இஸ்ரோ இந்த முறை 5 பெலோட்களை அனுப்பவுள்ளது. முதல் ராக்கெட்டில் ப்ரோபல்ஷன் மாட்யூல் (propulsion module) என்ற உந்துவிசை தொகுதி, டிசெண்டர் மாட்யூல் (descender module) என்ற இறங்கு தொகுதி, அஸ்ஸெண்டர் மாட்யூல் என்ற (ascender module) ஏறுவரிசை தொகுதி இடம்பெறும்.

ISRO மகா மாஸ்.. சந்திரயான்-4 நிலவில் எங்கு தரையிறங்க போகிறது?

சந்திரயான்-4 திட்டத்தில் இடம்பெற போகும் 2 ராக்கெட்களின் பெயர் என்ன தெரியுமா?

மறுபுறம், இரண்டாவது ராக்கெட்டில் இஸ்ரோ தனது டிரான்ஸ்பர் மாட்யூல் (transfer module) என்ற பரிமாற்ற தொகுதி மற்றும் ரீ-என்ட்ரி மாட்யூல் (re-entry module) என்ற மறு-நுழைவு தொகுதி ஆகியவற்றை விண்வெளிக்கு நிலவு நோக்கி அனுப்பவுள்ளது. மொத்தமாக 5 தொகுதிகளை இந்த சந்திரயான்-4 திட்டம் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ராக்கெட்களை இஸ்ரோ LVM-3 ராக்கெட் மற்றும் PSLV ராக்கெட் மூலம் ஏவும்.

நான்கு டன் பேலோட் ஹெவி லிஃப்டர் LVM-3 ராக்கெட் மூன்று தொகுதிக் கூறுகளைக் கொண்டு செல்லும். இதில் உந்துவிசை, இறங்கு மற்றும் ஏறுவரிசை தொகுதிகள் இடம்பெறும். அதேபோல், 2வது PSLV ராக்கெட்டில் பரிமாற்ற மற்றும் மறு நுழைவு தொகுதிகளை இஸ்ரோ அனுப்பவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணியின் முதன்மை நோக்கம் சந்திர மாதிரிகளை (Lunar samples) சேகரித்து விரிவான அறிவியல் பகுப்பாய்வுக்காக பூமிக்கு கொண்டு வர வேண்டும்.

சந்திராயன்-4 மிஷன் (Chandrayaa-4 mission) வெற்றிக்கு பிறகு, அமெரிக்கா (America), ரஷ்யா (Russia) மற்றும் சீனாவைத் (China) தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியா (India) மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரோவின் இந்த சந்திரயான்-4 திட்டம் 2028 ஆம் ஆணிடற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan-4 Mission Will Land Near To Shiva Shakti Point On Moon To Collect Lunar Soil and Rocks
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X