Home
News

விக்ரம் லேண்டர் பற்றி இதுவரை வெளிவராத புது தகவல்.. நிலவில் இடம்மாறிய லேண்டர்.. உண்மையை சொன்னது யார்?

விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு? பிரக்யான் ரோவருக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வி தான் கடந்த சில வாரங்களாக இணையம் முழுதும் ஒலித்துக்கொண்டிருந்தது. இஸ்ரோவிடம் இருந்து எந்தவொரு தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது எக்ஸ்க்ளூசிவ்வாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி வீரமுத்துவேல் (Chandrayaan-3 Project Director P Veeramuthuvel) கூறுகையில், விக்ரம் லேண்டர் (Vikram lander) சந்திரனில் ஹாப் பரிசோதனையை (Hop experiment) நிகழ்த்தியது திட்டமிடப்படாதது மற்றும் அதன் பணி நோக்கங்களை மீறியது என்று அவர் இப்போது கூறியுள்ளார். நினைவு கூற, ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்களை நிகழ்த்தியது.

விக்ரம் லேண்டர் பற்றி இதுவரை வெளிவராத புது தகவல்.. நிலவில் இடமாற்றம்..

விக்ரம் லேண்டர் நிலவின் சுற்றுச்சூழலின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை 14 புவி நாட்களில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டுள்ளது. 14 புவி நாள் என்பது ஒரு சந்திர நாள் (Lunar days) ஆகும். இந்த ஆராய்ச்சி நிறைவடையும் நேரத்தில், அதற்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் இருள் மற்றும் குளிர்ந்த வானிலை சூழ்ந்தது.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வீரமுத்துவேல், சந்திர மேற்பரப்பில் 14 நாள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையின் போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் (Pragtan rover) ஏராளமான தரவுகளை வழங்கியதாக கூறினார். சந்திரனில் விக்ரம் லேண்டர் திட்டமிடப்படாத ஹாப் எக்ஸ்பெரிமெண்ட் சோதனையும் செய்து முடித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஹாப் பரிசோதனையின் போது, ​​விக்ரம் லேண்டரின் என்ஜின் பூமியில் (earth) இருந்து சில கட்டளைகள் முதல் எழுப்பத்து. எதிர்பார்த்தபடி, விக்ரம் லேண்டர் தன்னை 40 சென்டிமீட்டர் (40 cm) உயர்த்தி, சிவசக்தி முனையில் அதன் அசல் இடத்திலிருந்து 30 முதல் 40 சென்டிமீட்டர் தொலைவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று வீரமுத்துவேல் கூறியுள்ளார்.

இந்த ஹாப் பரிசோதனை, சந்திரயான்-3 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து பாதுகாப்பாக தூக்கிச் செல்லும் திறனை சாத்தியம் என்று காண்பித்துள்ளது. அதாவது, சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பக்கூடிய எதிர்கால பணியை இந்த சோதனை உருவாக்கியுள்ளது என்று வீரமுத்துவேல் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் பற்றி இதுவரை வெளிவராத புது தகவல்.. நிலவில் இடமாற்றம்..

இந்த வெற்றிகரமான சூழ்ச்சியானது எதிர்காலத்தில் சந்திரன் மாதிரியை பூமிக்கு திரும்பி கொண்டு வருதல் மற்றும் சந்திரனுக்கான மனிதப் பயணங்களுக்கான புதிய சாத்தியங்களைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சந்திரனில் சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டது, இப்போது வரை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியோரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதற்கிடையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சந்திர இரவின் முந்தைய சுழற்சியில் இருந்து தப்பியிருக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ - ISRO) பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தற்போது வரை சந்திர தூதர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இருந்த போதிலும், லேண்டர் மற்றும் ரோவர் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி வெற்றி பெற்றதாக பாராட்டப்பட்டது. சந்திர இரவின் ஆரம்பம், ஏறக்குறைய 14 பூமி நாட்கள் நீடிக்கும் இருள் காலம், ஒரு மாதத்திற்கு முன்பு அதன் பணி முடிவடைந்த போதிலும், லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யானை புதுப்பிக்கும் அனைத்து முயற்சிகளின் முடிவையும் குறிக்கிறது.

செப்டம்பர் 30 அன்று சிவசக்தி முனையில் சூரிய ஒளி குறையத் தொடங்கியது. சந்திரயான்-3 மிஷன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது சரித்திரம் படைத்தது. இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் நாடு இந்தியா மட்டுமே என்று புறப்பட்டது. இப்போது மீண்டும் ரோவர் மற்றும் லேண்டரை எழுப்ப முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan-3 Vikram Lander Performed Unplanned Hop Experiment On Moon Was Successful Says ISRO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X