Home
News

நிலவில் இந்தியர்கள் விவசாயம் செய்ய முடியுமா? டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைக்கும் சந்திரயான்-3 ஆராய்ச்சி..

சந்திரயான்-3 (chandrayaan-3) நிலவின் தென்துருவதில் தரையிறங்கி, நிலவின் தரையில் புதைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை ஒன்றின் பின் ஒன்றாக கண்டறிந்து வருகிறது. பிரக்யான் ரோவர் (Pragyaan Rover) மற்றும் விக்ரம் லேண்டரின் (Vikram lander) கண்டுபிடிப்புகள் விஞ்ஞானிகளையே ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இஸ்ரோவின் முதற்கட்ட ஆராய்ச்சியில், நிலவில் ஆக்சிஜன் (Oxygen) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் சந்திரயான்-3, தென் துருவ பகுதியில் சல்பர் (Sulphur) எனப்படும் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல், நிலவின் மணலில் அலுமினியம் (Aluminium), கால்சியம் (Calcium), இரும்பு (Iron), குரோமியம் (Chromium), டைட்டானியம் (Titanium), மாங்கனிசு (Magnesium), சிலிகான் (Silicon) ஆகியவை இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவில் இந்தியர்கள் விவசாயம் செய்ய முடியுமா? டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!

நிலவில் ஐஸ் வடிவில் நீர் (Frozen water) இருப்பதை சந்திரயான் 1 (Chandrayaan-1) ஏற்கனவே உறுதி செய்த நிலையில், இப்போது சந்திரயான்-3 நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் இருக்கிறது என்றால், மனித வாழ்வுக்கு உகந்ததாக என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையை சொல்ல போனாலே ஆக்சைடு வடிவத்தில் இருக்கும் ஆக்சிஜனை மனிதர்கள் பயன்படுத்தி நிலவில் உயிர்வாழ முடியும் என்கிறார் இஸ்ரோ (ISRO) முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

ஆஹா.! நிலவில் மனிதர்கள் வாழ தகுதியான நீரும் (Moon water) இருக்கிறது. சுவாசித்து உயிர் வாழ தேவையான ஆக்சிஜனும் (Oxygen on moon) இருக்கிறது. அப்படியானால், மனிதர்களாகிய நமக்கு எழக்கூடிய அடுத்த கேள்வி, நிலவில் மனிதர்களுக்கான உணவை உருவாக்க (human food on moon) முடியுமா? என்பதாக தான் இருக்கிறது. உணவு என்றவுடன் விவசாயம் (Farming) என்ற சொல் நமது மண்டைக்குள் ஓட துவங்கிவிடுகிறது.

நிலவில் விவசாயம் செய்ய முடியுமா (Is farming is possible on moon)? என்று நீங்கள் ஷாக் ஆவது எங்களுக்கு இங்கே தெரிகிறது. உண்மையை சொன்னால், உங்கள் வாய் பிளக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளை வைத்து பார்க்கையில், நிலவில் தாவரங்கள் வளர வாய்ப்புள்ளது (plants can grow on moon dirt) என்கிறது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள். குறிப்பாக, இஸ்ரோவும் கூட இதை ஆணித்தரமாக நம்புகிறது.

ஆம், நிலவில் சரியான முறையை பின்பற்றினால் விவசாயம் சாத்தியம் என்கிறது முந்தைய ஆராய்ச்சி முடிவுகள். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் இதை தான் கூறுகிறார். ஆச்சரியப்படுத்தும் சில கூடுதல் தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நிலவில் விவசாயம் சாத்தியமானது. விண்வெளியில் பயிர்கள் விளைய வைக்க முடியும்.

நிலவில் இந்தியர்கள் விவசாயம் செய்ய முடியுமா? டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!

கோழி வளர்ப்பது போல், பயிர்களுக்கு சத்துக்களை கொடுத்து நிலவு மணலில் பயிர்விக்க முடியும். நிலவு மணலில் தாவரங்கள் வலம் என்பது இதற்கு முந்தைய சில ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயிர்களை விளைவிக்க போதிய சூரிய வெளிச்சம் இருக்கிறதா என்றால், இருக்கிறது என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. நிலவில் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவு என நீடிக்கிறது.

இந்த இருள் மற்றும் பகல் நாளில் பயிர்கள் எப்படி செழிக்கும் என்ற கேள்வி எழுகிறது. தென் துருவத்தில் சூரிய ஒளி விழும் (sun light rays) இடங்கள் என்று சில இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களில் எப்போதும் வெளிச்சம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பூமியிலும் (earth) கூட சூரியன் அஸ்தமனம் ஆகாத சில இடங்களும் உள்ளது. இத்தகைய செயல்பாடு பூமியில் நார்வே, ஸ்வீடன் ஆகிய இடங்களில் நிகழ்கிறது.

அடுத்தபடியாக, நிலவில் மனிதர்களை பூமியுடன் தொடர்பில் வைக்க உதவும் தொழில்நுட்பங்களை இயக்க தேவையான ஆற்றலை உருவாக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. நிலவில் இருந்து மின்சக்தி எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு நிலவில் ஹைட்ரஜன் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இஸ்ரோ நிலவில் இதை தான் தீவிரமாக தேடி வருகிறது. நிலவில் ஹைட்ரஜன் (Hydrogen) இருக்கும் போது எரிசக்தியை உருவாக்கலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan 3 Update Vikram Lander and Pragyaan Rover Found Oxygen and Water On Moon Can Use For Farming On Lunar Surface
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X