Home
News

சந்திரயான்-3 அப்டேட்: நிலவில் மீண்டும் கடும் இருள் சூழ்ந்தது.. லேண்டர் ரோவர் அடுத்த முறையாவது கண்விளக்குமா?

சந்திரயான்-3 (Chandarayaan-3) லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கிய சந்திர நிலப்பரப்பில் சூரியன் மீண்டும் மறைய துவங்கியுள்ளது. நிலாவின் அடுத்த இருந்த நாட்கள் மீண்டும் துவங்கிவிட்டது. ​இந்தியாவின் சந்திரயான்-3 தரையிறங்கிய தளமான சிவசக்தி புள்ளியின் மீது நீண்ட நிழல் சூலத்துவங்கிட்டது.

இது சந்திர இரவின் (lunar night) ஆரம்பத்தை குறிக்கிறது. ஏறக்குறைய இந்த இரவு, 14 பூமி-நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த 14 நாட்களுக்கு மீண்டும் ரோவர் மற்றும் லேண்டர் இருளில், கடும் பனியில் சிக்கி இருக்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இவற்றின் பணி முடிவடைந்த போதிலும், லேண்டர் விக்ரம் (Vikram lander) மற்றும் ரோவர் பிரக்யானை (Pragyan rover) எழுப்பும் முயற்சியை இஸ்ரோ கைவிடவில்லை.

நிலவில் மீண்டும் கடும் இருள் சூழ்ந்தது.. லேண்டர் கண் விழிக்குமா?

செப்டம்பர் 30 அன்று சிவசக்தி முனையில் சூரிய ஒளி குறையத் தொடங்கியது. சந்திர இரவின் முந்தைய சுழற்சியில் லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இருவரும் உயிர் பிழைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லேண்டர்-ரோவர் இருவரும் பணியை முடித்துவிட்டு உறக்க நிலையில் வைக்கப்பட்டனர்.

கோரோ (Kourou) மற்றும் ISTRAC, பெங்களூரில் உள்ள ஐரோப்பிய நிலையம் ஆகியவை லேண்டர் மற்றும் ரோவரை எழுப்ப பல முறை பிங் (Ping) செய்து முயற்சித்தனர். ஆனால், எந்த பாசிட்டிவ் (positive) ரியாக்க்ஷனும் ரோவர் மற்றும் லேண்டரில் இருந்து வரவில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) ஏவப்பட்ட சந்திரயான்-3 பணி, ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியபோது சரித்திரம் படைத்தது.

இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவைக் குறித்தது. சிவசக்தி பாயின்ட் (Shiv Shakti Point) என்று பெயரிடப்பட்ட தரையிறங்கும் தளம், சந்திர வட துருவத்திலிருந்து சுமார் 4,200 கிலோமீட்டர் தொலைவில் மன்சினஸ் சி ( Manzinus C) மற்றும் சிம்பீலியஸ் (Simpelius N craters) என் பள்ளங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

இந்த பணியில் பெண் விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரிப்பதற்காக 'சிவ் சக்தி (Shiv Shakti)' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இருப்பினும், நிலவின் இரவுப் பொழிவு பணிக்கு ஒரு தவிர்க்க முடியாத முடிவைக் கொண்டுவருகிறது, ஏனெனில் கடுமையான நிலைமைகள் லேண்டர் மற்றும் ரோவர் உயிர்வாழ்வதை சாத்தியமற்றதாக்குகின்றன.

நிலவில் மீண்டும் கடும் இருள் சூழ்ந்தது.. லேண்டர் கண் விழிக்குமா?

சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுட்காலம் என்பது ஒரு முழு நிலவு நாள் தான். அதாவது வெறும் 14 பூமி நாட்களுக்கு மட்டுமே செயல்படும் நோக்கத்தை கொண்டது. அதற்கு மேல் அதிலுள்ள கருவிகளை இயக்குவதற்கான சக்தி அந்த ரோவர் மற்றும் லேண்டரில் இல்லை என்பதே உண்மை. ஒருவேளை, இவற்றை அதிக நாட்கள் இயக்க வேண்டுமெனில், நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சூரிய ஒளி மின்சக்திதான் (solar light power).

ஆனால், நிலவின் தென் துருவத்தில் நாம் எதிர்பார்த்த அளவில் வெப்பம் கிடைக்கவில்லை. இதனால் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. நிலவுப் பகுதியில் வெப்பம் மிகக் குறைவாகவே இருக்கிறது. அதாவது மைனஸ் - 150 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் - 175 செல்சியஸ் வரை வெப்பம் அதீத குளிருடன் காணப்படுகிறது.

இந்த அளவு வெப்பத்தை வைத்து, சூரிய ஒளி மின்சக்தியை உருவாக்க முடியாது. இதனால், ரோவர் மற்றும் லேண்டரை இயக்குவது என்பது சந்தேகத்திற்குரியது என்று வீரமுத்துவேல் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், இந்த பணி ஒரு மகத்தான வெற்றியாகப் பாராட்டப்பட்டது. தரையிறங்கிய விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் சந்திரனில் திட்டமிட்ட இரண்டு வார ஆயுட்காலத்தை வெற்றிகரமாக முடித்து, சந்திரயான்-3 திட்டத்தை வெற்றியடைய செய்துள்ளன.

இவை அற்புதமான சோதனைகளை நடத்தி மதிப்புமிக்க தரவுகளை சேகரித்துள்ளன. விக்ரம் லேண்டர் மூலம் சந்திராஸ் சர்ஃபேஸ் தெர்மோபிசிகல் எக்ஸ்பிரிமென்ட் (ChaSTE) எனப்படும் ஆன் போர்டு பேலோடை இயக்கியது. இது சந்திர மண்ணின் வெப்பநிலையை வெவ்வேறு ஆழங்களில் முதல் முறையாக அளந்தது. ஆயிரக்கணக்கான இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கடின உழைப்பால் இந்த பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

சந்திரயான்-3 திட்டம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறன்களை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் உலகளாவிய நிலவு ஆராய்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. விக்ரம் மற்றும் பிரக்யனின் பயணத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், சிவசக்தி முனையில் சூரியன் மறையும் போது, ​​எதிர்கால சந்திரப் பயணங்களுக்கான புதிய விடியலைக் குறிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan-3 update: The moon is dark again Will the Lander rover wake-up next time? ISRO explains
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X