Home
News

இருளில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற ரோவர்.. மீண்டும் எப்போது கண்விழிக்கும்.. ரோவர் ஆராய்ச்சி மீண்டும் துவங்குமா

நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய கடந்த ஜூன் 14-ம் தேதி இஸ்ரோ சந்திரயான்-3 (Chandrayaan 3) திட்டத்தை நிலவு நோக்கி பாயச் செய்தது. கடந்த மாதம் 23ம் தேதி விக்ரம் லேண்டர் (Vikram lander) வெற்றிகரமாக நிலவின் தென்துருவதில் சாப்ட் டச் லேண்டிங் செய்யப்பட்டது.

நிலவில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட பிறகு, பிரக்யான் ரோவர் (Pragyan rover) நிலவின் மணலில் அதன் தடத்தை பதிக்க துவங்கி மூன் வாக் (Moon walk) செய்ய துவங்கியது. நிலவில் தரையிறங்கிய தருணத்தில் இருந்து பிரக்யான் ரோவர், நிலவின் பரப்பில் உள்ள விஷயங்களை ஆராய்யத்துவங்கிவிட்டது. பிரக்யான் ரோவர் துவங்கிய முதற்கட்ட ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற ரோவர்.. மீண்டும் எப்போது கண்விழிக்கும்?

விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள CHASTE கருவி மூலம் நிலவின் வெப்பநிலை (moons temprature) அளவு கண்டறியப்பட்டது. நிலவின் 8 சென்டிமீட்டர் ஆழத்தில் மைனஸ் 10 டிகிரி (-10 degree celsius) செல்ஸியஸ் வெப்பநிலை இருப்பதாக கண்டறிந்தது. இந்த தகவலை விக்ரம் லேண்டர் உடனே பூமிக்கு (earth) அனுப்பியது. அதேபோல், நிலவின் மேற்பரப்பில் சுமார் 50 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையையும் இந்த கருவி கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பிரக்யான் ரோவரில் உள்ள LIBS என்ற கருவி மூலம் நிலவின் மணலில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டறிந்து, உறுதி செய்துள்ளது என்று இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது. கந்தகம் என்பது ஆங்கிலத்தில் சல்பர் என்ற பொருளை குறிக்கிறது. இத்துடன் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr), மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவற்றைக் கண்டறிந்தது.

ரோவரின் தகவல்கள் மாங்கனீசம் (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளன. அடுத்தகட்டமாக, நிலவின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் (hydrogen) உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதன் முடிவுகளை இஸ்ரோ இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளது. நிலவில் ஹைட்ரொஜென் இருக்கிறதா? இல்லையா? என்பது விரைவில் தெரிவிக்கப்படும்.

இதைத்தவிர, நிலவின் மேற்பரப்பில் குறைந்த அளவு ஐயனியம் எனப்படும் பிளாஸ்மா (plasma) இருப்பதை லேண்டரில் உள்ள தனித்துவமான கருவி கண்டுபிடித்துள்ளது. நிலவில் உள்ள ஒரு சதுரடி அளவுக்கு, குறைந்தது 50 லட்சம் முதல் 3 கோடி அளவுக்கு எலெக்ட்ரான்ஸ் (electrons) இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த தனிமங்களை தவிர்த்து, நிலவில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு அதிர்வையும் லேண்டர் கண்டறிந்துள்ளது.

 ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற ரோவர்.. மீண்டும் எப்போது கண்விழிக்கும்?

இது இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயற்கை அதிர்வு நிலவில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்துள்ளது என்று விக்ரம் லேண்டரின் ஆராய்ச்சி தகவல்கள் தெளிவாக காண்பித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக, பிரக்யான் ரோவர் அதன் முதற்கட்ட ஆராய்ச்சியயை 10 நாட்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டதனாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரக்யான் ரோவர் இதுவரை 101.4 மீட்டர் அளவு வெற்றிகரமாக பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இப்போது 12 நாட்களுக்கு பிறகு, நிலவில் சுற்றி திரிந்த பிரக்யான் ரோவர் டீப் ஸ்லீப் (Pragyan rover deep sleep mode) மோடுக்கு சென்றுள்ளது. அதாவது ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த ஆராய்ச்சி முடிவுகளையும் விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பிவிட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

பிரக்யான் ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, நித்திரை நிலைக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிரக்யான் ரோவர் மீண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி ஆக்டிவேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் இருண்ட நாட்கள் நிறைவடைந்த பிறகு, சூரிய ஒளி தென்துருவத்தில் படும் பொழுது மீண்டும் பிரக்யான் ரோவர் கண்விழிக்கும் (Pragyan rover might wake up) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரக்யான் ரோவர் மீண்டும் கண்விழித்து வருமா? இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை மீண்டும் துவங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரோவர் கண்விழிக்காவிட்டால் இந்திய தூதரக நிலவில் நிலைத்து நிற்கும் என்று இஸ்ரோ கம்பீரமாக கூறியுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி இஸ்ரோ மற்றொரு வியக்கத்தக்க செயலை செய்து காட்டும் என்று நமபபடுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan 3 Update Pragyan Rover Went To Deep Sleep Mode Might Again Wake Up At September 22nd Says ISRO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X