சந்திரயான் 3 குறித்து இஸ்ரோ தலைவர் கூறிய சுவாரஸ்ய தகவல்: வச்ச குறி தப்பாது.!

|

சந்திரயான் 3 விண்கலம் ஆனது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3

சந்திரயான் 3

அதாவது நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

சந்திரயான் 2

சந்திரயான் 2

ஏற்கனவே நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 2 எனும் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 2019-ம் ஆண்டு விண்ணில் ஏவியது. ஆனால் இந்த சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் கலன் மட்டும் தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி உடைந்ததாகக் கூறப்படுகிறது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

ஆர்பிட்டர்

ஆர்பிட்டர்

இருந்தபோதிலும் சந்திரயான் 2 விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல அசத்தலான புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

இஸ்ரோ தலைவர்

இஸ்ரோ தலைவர்

மேலும் சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர்சோம்நாத் கூறினார்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

நிலவை ஆய்வு

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் தயாராக உள்ளது. பின்பு இந்த சந்திரயான் 3 விண்கலம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரயான் 2 இல் ஏற்பட்டபிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

லேண்டர் ரோவர்

லேண்டர் ரோவர்

அதேபோல் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை கண்டிப்பாக முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றவருவதால், இந்த முறை லேண்டர் ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார் இஸ்ரோ தலைவர்.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்..!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்..!

இஸ்ரோ

இதுதவிர அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டின் முதல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். பின்பு 2024-ம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Chandrayaan-3 scheduled for launch in June next year: ISRO chairman: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X