Home
News

நான் ஆவரேஜ் மாணவன்தான்.. சந்திராயன் 3 திட்டத்தை சாதித்து காட்டிய தமிழர் கூறியது இதுதான்.. குவியும் பாராட்டு..

இந்தியாவின் இஸ்ரோ மூலம் சந்திரயான் 3 விக்ரம் லேணடர் ஆனது நிலவில் வெற்றிகரமாகக் களமிறங்கி உள்ளது. குறிப்பாக இந்த விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் தருணத்தில் முதலில் இறங்க வேண்டிய இடம் சரியில்லாத காரணத்தால் அருகில் இருந்த இன்னொரு இடத்தில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நிலவில் கால் வைக்கும் நாடுகளுக்கு மத்தியில் நிலாச்சோறு மட்டுமே ஊட்டி வருவதாக்கூறிய வாய்களுக்கு பூட்டுப்போடும் விதமாக நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது நமது இந்தியா. குறிப்பாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் பணி இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றாலும் அதில் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு அளப்பரியது.

சந்திராயன் 3 திட்டத்தை சாதித்து காட்டிய தமிழர் கூறியது இதுதான்..

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியான சந்திரயான் 3 (Chandrayaan 3) திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் முன்பு ஒருமுறை பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் தான் எப்படி இவ்வளவு தூரம் வந்தேன் என்பது பற்றியும், அதற்கான உழைப்பு குறித்து வீர முத்துவேல் பேசி உள்ளார். மேலும் அவர் பேசியது என்னவென்று இப்போது தெரிந்துகொள்வோம்.

அதாவது இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் (Veeramuthuvel) கூறியது என்னவென்றால், எல்லோருக்கும் வணக்கம், இந்த வாய்ப்பு கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி. இஸ்ரோவில் நான் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது விழுப்புரத்தில் தான். அங்கு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன்.

ஆனால் பள்ளியில் நாள் ஒரு ஆவரேஜ் மாணவன் தான். அடுத்து எங்க படிக்கணும், என்ன படிக்கணும் என்பது குறித்து எந்தவொரு ஐடியாவும் எனக்கு கிடையது. அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன்.

படிக்கு போதே எனக்கு இன்ஜினியரிங் மேல் அதிக ஈடுபாடு வந்தது. அதனால் தான் என்னால் 90 சதவீதம் மதிப்பெண் எடுக்க முடிந்தது. மெரிட்டில் ஸ்ரீசாய்ராம் என்ஜினிரியங் கல்லூரியில் பிஇ சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன். ஆனால் முதல் அல்லது இரண்டாவது இடத்திற்கு வருவதற்காக எல்லா சமயத்திலும் படித்துக் கொண்டிருக்க மாட்டேன்.

படிக்கும் போது 100 சதவீதம் கவனத்துடன், நல்லா புரிஞ்சு படிக்கணும் என்று நினைப்பேன். அதுதான் எனக்கு நல்ல பர்சன்டேஜ் மதிப்பெண்களை வாங்கி கொடுத்தது. பிஇ மாதிரி எம்இ-யிலும் செமஸ்டர்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பேன். அதன்பின்பு கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக லட்சுமி மிசின் ஒர்க் கோவையில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தேன். அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு விண்வெளி ஆராய்ச்சி மீது அதிக ஈடுபாடு இருந்தது.

அப்போது தான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிசனில் டிசைன் இன்ஜினியராக சேர்ந்தேன். அதன்பிறகு என்னுடைய கனவான இஸ்ரோவில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு முதலில் திட்ட இன்ஜினியராகவும், அதன்பின்பு திட்டத்தின் மேனேஜராகவும் நிறைய அறிவியல் செயற்கைக்கோள் திட்டங்களில் பணியாற்றினேன்.

அதேபோல் செவ்வாய் கிரகத்தின் ஆய்வு செயற்கைக் கோளிலும் பணியாற்றினேன். அதேசமயம் எனது ஆராய்ச்சியை விடவில்லை. அதாவது பிஎச்டி பெங்களூருவில் சேர்ந்தேன். vibration separation of electronics package satellite என்பதில் ஆராய்ச்சி செய்தேன். இதன் கட்டுரைகளைச் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறேன். அதன்பின்பு பிஎச்டி பட்டத்தையும் வென்றேன்.

சந்திராயன் 3 திட்டத்தை சாதித்து காட்டிய தமிழர் கூறியது இதுதான்..

இஸ்ரோவின் நானோ டீமை தலைமை தாங்க வாய்ப்பு கிடைத்தது. 3 நானோ செயற்கை கோள்களில் பணியாற்றி உள்ளேன. அதன்பின்பு அசோசியேட் பிராஜெக்ட் இயக்குனராக சந்திரயான் 2-வில் பணியாற்றினேன். இப்போது இஸ்ரோ என்னைச் சந்திரயான் 3 இல் திட்ட இயக்குனராக நியமித்துள்ளது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய திட்டம். பெரிய டீமை நான் லீட் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண ஆள். என்னால் இந்த அளவிற்கு வர முடியும் என்றால், எல்லாராலும் முடியும்.

வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்துவது என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சுயக்கட்டுப்பாடு, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத 100 சதவீதம் ஈடுபாடு, கடின உழைப்பு, நம்முடைய தனித்தன்மை போன்றவை வெற்றியைக் கொடுக்கும். கடின உழைப்புக்கு பலன் உண்டு என்று கூறியுள்ளார் வீரமுத்துவேல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan 3 Project Director Veera Muthuvel Inspirational Journey: Tells His Life Story in Video: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X