திக் திக் நிமிடங்களை.. LIVE ஆக பார்ப்பது எப்படி? இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்கும் Chandrayaan 3!
இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷன் (Chandrayaan 3 Mission) வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கினால், அது இந்தியாவிற்கு மட்டுமின்றி, உலகலாவிய அறிவியல் சமூகத்துக்குமான மாபெரும் சாதனையாக இருக்கும். ஏனென்றால் சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் (Vikram Lander) தரை இறங்கப்போவது சந்திர கிரகத்தின் தென் துருவத்தில்!
இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளால் திட்டமிட்டபடி எல்லாமே மிகச்சரியாக நடந்தால் நிலவின் தென் துருவத்தில் (South Pole of the Moon) தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் இந்த வெற்றியானது மற்ற நாடுகளும் அங்கே தரை இறங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான முக்கிய தூண்டுதலாக இருக்கும்.

சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கும் வரலாற்று நிகழ்வை நீங்கள் நேரலையில் (Live Telecast) பார்க்க விரும்பினால்.. உங்களுக்கு பல வகையான விருப்பங்கள் உள்ளன. சந்திரயான்-3 மூன் லேண்டிங் ஆனது இஸ்ரோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website), இஸ்ரோவின் யூட்யூப் (YouTube) சேனல் மற்றும் பேஸ்புக் (Facebook) பக்கம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இஸ்ரோவின் இந்த லைவ் டெலிகாஸ்ட் ஆனது ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.27 மணிக்கு தொடங்கும். இதுதவிர்த்து சந்திராயன்-3 நிலவில் தரை இறங்கும் நேரடி நடவடிக்கைகள் டிடி நேஷனல் டிவி சேனல் (DD National TV Channel) வழியாகவும் ஒளிபரப்பப்படும். இந்த பட்டியலில் சமீபத்திய சேர்க்கைகளாக நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் (National Geographic Channel) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney Plus Hotstar) இணைந்துள்ளன.
நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் லைவ்ஸ்ட்ரீமிங் ஆனது ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்.. உலகளவில் லைவ்ஸ்ட்ரீமிங் செய்யும் அளவிற்கு சந்திரயான்-3 மிஷன் ஏன் இவ்வளவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம்!
இது ஏன் இவ்வளவு முக்கியமான ஸ்பேஸ் மிஷனாக பார்க்கப்படுகிறது என்றால்.. சந்திரயான்-3 ஆனது நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்க உள்ளது. இப்பகுதி நிலவின் இருண்ட பகுதியாகும். அங்கே உறைந்த நீர் (Frozen water) மற்றும் விலைமதிப்பற்ற தாதுக்கள் (Precious minerals) இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை அங்கே எந்த நாடும் தரை இறங்கியது இல்லை என்பதால் எல்லாமே வெறும் நம்பிக்கைகளாகவே உள்ளன.
விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் (Pragyan Rover) வழியாகவே.. நிலவின் தென் துருவத்தில் என்ன உள்ளது என்கிற உண்மை ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிய வரவுள்ளது. சந்திரயான்-3 ஏன் இவ்வளவு முக்கியமான ஸ்பேஸ் மிஷனாக பார்க்கப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே பலருக்கும் போதுமானதாக இருக்கும்!
சந்திரயான்-3 லேண்டர் ஆனது சந்திரயான்-2 லிருந்து (Chandrayaan-2) எப்படி வேறுபட்டது? இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்தின் (ISRO Chairman S Somanath) கருத்துப்படி, விக்ரம் லேண்டரின் சென்சார்கள் மற்றும் எஞ்சின் (Sensors and Engine) செயல் இழந்தாலும் கூட அதனால் சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்க முடியும்.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும்? டச் டவுனுக்கு (Touch Down) முன்னதாக, அதாவது நிலவை தொடுவதற்கு சற்று முன்னதாக, தான் தரையிறங்கும் மேற்பரப்பை சரிபார்க்க லேண்டர் மேற்பரப்பிற்கு மேலே வட்டமிடும். தரையிறங்கிய பின்னர் அது தூசிகள் படிய அனுமதிக்கும்.
பின்னர் பிரக்யான் ரோவர் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கும், நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருட்களை சேகரிக்கவும் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படும். லேண்டர் மற்றும் ரோவர் சூரிய சக்தியில் (Solar Power) இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஒரு சந்திர நாள் (பூமியில் உள்ள கணக்கின்படி சுமார் 14 நாட்கள்) செயல்படும்படி திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








