'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா?

|

சந்திரயான் 1 விண்கலமானது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் உள்ள தாதுக்கள் மற்றும் வேதி மூலகங்களை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. மேலும் இந்த விண்கலத்தின் மூலமாகவே நிலவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த திட்டத்தின் தலைவராக செயல்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

சந்திரயான்-2 திட்டத்தின் முயற்சியே வெற்றிதான்

சந்திரயான்-2 திட்டத்தின் முயற்சியே வெற்றிதான்

இந்தியா நிலவுக்கு அனுப்பிய முதல் விண்கலன் இதுவாகும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியா மிகவும் பெருமை அடைந்தது. இந்த விண்கலமானது இரண்டாண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 10 மாதங்களிலேயே விண்கலத்தின் ஒரு பாகத்தில் கோளாறு ஏற்பட்டு செயல் இழந்துவிட்டது.

இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு விண்கலம் அனுப்பியதில்லை. இந்தியா முதன்முறையாக சந்திரயான் 2 விண்கலம் தயாரித்து ஜூலை 15 ஆம் தேதி விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டது. ஆனால் சில தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

வாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?வாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

இறுதி கட்டத்தில் துண்டிக்கப்பட்ட சிக்னல்

இறுதி கட்டத்தில் துண்டிக்கப்பட்ட சிக்னல்

புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலமானது, படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதில் இருந்து பிரித்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. நிலவில் இருந்து சரியாக 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் பயணித்த போது, அதில் இருந்து வரும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பை இணைப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இணைக்க முடியவில்லை.

இஸ்ரோவை ஊக்குவித்த இந்தியா...

இஸ்ரோவை ஊக்குவித்த இந்தியா...

சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு தூக்கமின்றி பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அதேபோல், சமூகவலைதளத்தில் இஸ்ரோவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவந்தது. இஸ்ரோ தலைவர் சிவன், தனியார் விமானத்தில் பயணம் மேற்கொள்ள விமானத்துக்குள் சென்ற போது அதில் இருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். இந்த செயல் இஸ்ரோ தலைவர் சிவனை மிகவும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. மேலும் சமீபத்தில் மேடை ஒன்றையில் பேசிய பிரதமர் மோடி ஆராய்ச்சி என்பது உடனடியாக நூடுல்ஸ் செய்வதோ, பீட்சா வாங்குவது போலவோ இல்லை எனவும் ஆராய்ச்சியில் பொறுமை அவசியம் எனவும் அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது சந்திரயான் 2 வெற்றித் திட்டமே என்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

சந்திரயான் 2 திட்டம் ஏன் தோல்வி இல்லை

சந்திரயான் 2 திட்டம் ஏன் தோல்வி இல்லை

சந்திரயான் 2 வில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் தகவல் தொடர்பை இழந்தாலும், ஆர்பிட்டர் எனவும் கருவி நிலவைச் சுற்றிவந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் அவ்வப்போது நிலவின் புகைப்படங்கள் துள்ளியமாக அனுப்பி வருகிறது. டெரைய்ன் மேப்பிங் கேமரா 2, டிஜிட்டல் முறையில் தெளிவுத் திறன் கொண்ட ஸ்டீரியோ வகை படங்களை துள்ளியமாக வழங்கி வருகிறது. இதில் ஆர்பிட்டர் மூலம் நிலவில் உள்ள கிராடர் பள்ளங்களை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. மும்மடங்கு தெளிவான புகைப்படத்தை சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்படுவதால், அதை டிஜிட்டல் முறையில் மாற்றும் போது நிலவில் உள்ள பள்ளம் எரிமலைக் குழிகள், வாழ்விடத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தெளிவாக அறிய முடியும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்ணுக்கு அனுப்பும் தேதியை அறிவித்த இஸ்ரோ...

சந்திரயான் 3 விண்ணுக்கு அனுப்பும் தேதியை அறிவித்த இஸ்ரோ...

சந்திரயான் 3 திட்டம் குறித்து பல்வேறு ஆலோசனைக் கூட்டம் நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான் 2 இல் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சந்திரயான் 3 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

லேண்டரின் கீழ்பகுதிகள்

இதில் அனுப்பப்படும் லேண்டரின் கீழ்பகுதிகள் வலுவானதாக இருக்கும் எனவும் நிலவில் உள்ள பள்ளம் போன்ற எந்த வகையான சூழலில் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் சந்திரயான் 3 அடுத்தாண்டு(2020) நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
The deadline of the said project is said to be November 2020 and will soon be submitted to the Prime Minister Narendra Modi.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X