சந்திராயன் 2 விண்கலம்: நிலவில் ஆர்கான்-40 வாயு இருப்பதை கண்டுபிடித்த ஆர்பிட்டர்.!
சமீபத்தில் இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40 வாயு இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் கண்டறிந்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும்நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோவின் சந்திராயன்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.

அதன்பின்பு பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு விண்கலத்தின் ஒரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை
நிறுத்தப்பட்டது. ஆனாலும் தீடிர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலத்தின் லேண்டர் கலன் மட்டும் திட்டமிட்டபடி நிலவில் தரை
இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நிலவின் புறவெளி மண்டலம், பருவ நிலை, அங்குள்ளபள்ளங்கள், சூரிய ஒளியின் தாக்கம், மாங்கனீஸ் தாதுக்கள், பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் போன்ற பல முக்கிய அம்சங்கள்குறித்த அரிய தகவல்கள் ஆர்பிட்டர் ஆய்வில் கிடைத்துள்ளன.

அதன்படி தற்போது நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40 என்ற வாயு உருவாகி புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ளசேஸ்-2 என்ற கருவி கண்டறிந்துள்ளது. மேலும் இது தொடர்பாக இஸ்ரோ அமைப்பு வெளியிட்ட தகவல் என்னவென்றால்,

நிலவில் புறவெளி மண்டல பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக சேஸ்-2 கருவி ஆய்வு செய்து வருகிறது. அதில் நிலவில் மேற்பரப்பில் உருவாகும் ஆர்கான்-40 வாயு புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நிலவின் மத்திய பகுதி மற்றும் உயர் அட்சரேகை பகுதிகளில் ஆர்கான்-40 அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதற்குமுன்பு அவை புறவெளி மண்டலத்தில் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்போது சந்திராயன்-2 ஆய்வில் ஆர்கான்-40 வாயுவின் இயற்பியல் கோட்பாடுகள் குறித்து முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. அதேபோல் இது நிலவு தொடர்பான ஆய்வில் ஒரு மைல் கல்லாகும். பின்பு இதன் டேட்டாக்கள் அடுத்தக்கட்ட ஆய்வுகள் மற்றும் நிலவின் பயணங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications