மறு தேர்தல் நடத்த வேண்டும் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம்.! காரணம் இதுதான்.!
முதல் கட்ட தேர்தலே இன்னும் நிறைவடையாத நிலையில், அதற்குள் மறு தேர்தல் நடத்த வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை தேர்தல் இன்று துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துங்கியுள்ளது.

முதல் கட்ட தேர்தலே இன்னும் நிறைவடையாத நிலையில், அதற்குள் மறு தேர்தல் நடத்த வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நீண்ட வரிசையில் வாக்காளர்கள்
ஆந்திர, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 சட்டப்பேரவைகளுக்கு வாக்குப் பதிவு இன்று துவங்கியுள்ளது. வாக்காளர்கள் காலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம்
ஆந்திர மாநிலத்தில் பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படாததால் மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை
பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படாததானால் பலரும் வாக்களித்தல் திரும்பிச் சென்றுள்ளனர். முக்கியமாக சில முக்கிய வாக்குச்சாவடிகளில் காலை 9:30 மணி வரையிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

கடிதத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருப்பதாவது
எனவே ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார், அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது "ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறுகாரணமாக செயல்படாததினால் வாக்காளர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்".

2 மணி நேரத்திற்கும் மேல் செயல்படாத எந்திரங்கள்
வாக்களிக்காமல் சென்ற வாக்காளர்கள் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. இன்று காலையில் மட்டும் சில வாக்கு எந்திரங்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் செயல்படாமல், ஏகப்பட்ட வாக்குகள் பதிவிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

மறு தேர்தல்
வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications