Home
News

Chandra Grahan 2022: நாளை நடக்கும் சந்திர கிரகணத்தின் நேரம் இதோ.. வெறும் கண்ணில் பார்க்கலாமா?

முழு சந்திர கிரகணம் உலகின் பல பகுதிகளில் தெரியும் எனவும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பகுதியில் இதை காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நிலவு நாளில் நடக்கும் இந்த கிரகணத்தை உங்கள் பகுதியில் எப்படி பார்க்கலாம்.

சந்திர கிரகணம் 2022

சந்திர கிரகணம் 2022

செவ்வாய்கிழமை (நாளை) முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள நபர்கள் இந்த கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும். ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் உள்ள நபர்கள் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். முழு நிலவு நாளில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது.

முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம்

கொல்கத்தாவில் உள்ள எம்பி பிர்லா கோளரங்கத்தின் தகவல்படி, அனைத்து முழு நிலவு நாட்களிலும் சூரியன் பூமி சந்திரன் நேர்கோட்டில் வருவதில்லை. இது மூன்றும் நேர்கோட்டில் வரும் காலங்களில் கிரகணங்கள் நிகழ்கிறது. அதன்படி நாளை சந்திர கிரணம் நிகழ்கிறது. இந்தாண்டின் நிகழும் கடைசி கிரகணம் இதுவாகும். முழு சந்திர கிரகணம் உலகின் பல பகுதிகளில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சந்திர கிரகணம் நிகழும் நேரம்

சந்திர கிரகணம் நிகழும் நேரம்

இந்தியாவை பொறுத்தவரை இட்டாநகர், கவுகாத்தி, சிலிகுரி, கொல்கத்தா மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் முழு கிரகணமும் தெரியும். டெல்லி, ஸ்ரீநகர், சென்னை, காந்திநகர், மும்பை ஆகிய நகரங்களில் பகுதி கிரகணத்தை காண முடியும். முழு சந்திர கிரகணம் பிற்பகல் 4:23 மணிக்குத் தொடங்கும், மொத்தம் 1 மணி 25 நிமிடங்கள் இந்த கிரகணம் நீடிக்கும், அதேபோல் கிரகணத்தின் பகுதி 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?

முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?

டெட்ராய்ட், வாஷிங்டன் டிசி, ஹவானா, மெல்போர்ன், பாங்காக், ஜகார்த்தா, சியோல், சிட்னி, மணிலா, சிகாகோ, டோக்கியா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்சிகோ மற்றும் பெய்ஜிங் ஆகிய இடங்களில் முழு கிரகணமும் தெரியும்.

உங்கள் பகுதியில் கிரகணம் தெரியுமா?

உங்கள் பகுதியில் கிரகணம் தெரியுமா?

2022 இன் கடைசி கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. முழு சந்திர கிரகணத்தை கொல்கத்தா மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பார்க்க முடியும் எனவும் பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் தெரியும் எனவும் வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணம் அனைத்து இடங்களிலும் தெரியாது என்றாலும் கிரகணத்தின் பகுதி கட்டம் ஏணைய பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது.

நவம்பர் 8 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணம்

நவம்பர் 8 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணம்

நவம்பர் 8 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணம் ஆனது மதியம் 2:48 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு நிறைவடைகிறது. கொல்கத்தா உட்பட கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளவர்கள் சந்திர கிரகணத்தின் மொத்த கட்டத்தையும் அனுபவிக்க முடியும் என கூறுகின்றனர்.

எந்த கிரகணம் இந்தியாவில் தெரியும்?

எந்த கிரகணம் இந்தியாவில் தெரியும்?

குறிப்பாக இந்தியாவின் கிழக்கு பகுதியில் சரியாக மாலை 4:52 மணி முதல் 4:54 மணி வரை முழுமையாக தெரியும் என கூறப்படுகிறது. இந்தியாவில் முழுமையாக தெரியும் சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 அன்று நடக்கும் எனவும் இருப்பினும் அக்டோபர் 2023 இல் நிகழும் சந்திர கிரகணத்தின் சிறிய பகுதி இந்தியாவில் காண முடியும் எனவும் கூறப்படுகிறது.

வெறும் கண்களால் பார்க்கலாமா?

வெறும் கண்களால் பார்க்கலாமா?

இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் இந்தாண்டு நிகழ்கிறது. 2022 ஆம் ஆண்டின் 4 கிரகணங்களில் இது நான்காவது கிரகணம் ஆகும். இந்தாண்டின் முதல் சந்திர கிரகணமானது மே 15, 16 தேதிகளில் நடந்தது.

சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய ஒரே கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. சூரிய ஒளி பூமியில் விழாதபடி சந்திரன் மறைக்கிறது. இதன் காரணமாக சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுகிறது. இந்த நிகழ்வு அம்ப்ரா என அழைக்கப்படுகிறது. அதன்படி நிகழும் இந்தாண்டின் கடைசி கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Chandra Grahan 2022: When and How to Watch in Your City?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X