2020 கடைசி சந்திர கிரகணம் இன்று: கார்த்திகை பூர்ணிமாவுடன் நிகழும் கிரகணம்- என்ன ஸ்பெஷல்!

|

2020 ஆம் ஆண்டில் ஜனவரி 10 ஆம் தேதி, ஜூன் 5 ஆம் தேதி, ஜூலை 5 ஆம் தேதிகளில் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதன்படி இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நவம்பர் 30 ஆம் தேதி நிகழ உள்ளது.

சந்திரகிரகணம் 2020

சந்திரகிரகணம் 2020

இந்த சந்திரகிரகணம் புறநிழல் நிலவு மறைப்பாக இருக்கும். கடந்த சந்திரகிரகணம் போன்றே இந்த கிரகணமும் இருக்கும். இந்த சந்திரகிரகணம் குறித்து அறிவியல் மைய அதிகாரிகள் கூறுகையில் பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால் சந்திரன் பூமி நிழலின் மங்கலாக வெளிப்புற பகுதியில் நகரும்.

புறநிழல் சந்திர கிரகணம்

புறநிழல் சந்திர கிரகணம்

புறநிழல் சந்திர கிரகணம் குறித்து கூறுகையில் சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்று ஒரே நேர் கோட்டில் இருக்காது. இது மூன்றும் ஒரே கோட்டில் இருக்கும்போது பூமியின் உள்நிழல் நிலவின் மீது விழுந்து அது மறைக்கப்படும். அப்படி உள்நிழல் விழாமல் புறநிழல் நிலவின் மீது விழுவதன் காரணமாக இது புறநிழல் சந்திர கிரகணம் என கூறப்படுகிறது.

சந்திர கிரகணமாகவே கருதப்படுவதில்லை

சந்திர கிரகணமாகவே கருதப்படுவதில்லை

புறநிழல் சந்திர கிரகணத்தின்போது நிலவு பூமியின் உள்நிழலால் மறைக்கப்படாத காரணத்தால் இதை சந்திர கிரகணமாகவே கருதப்படுவதில்லை என அறிவியல் மைய தரப்பினர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் சாட் டெலிட் ஆகாமல் நம்பரை மாற்றுவது எப்படி? WhatsApp சிம்பிள் டிப்ஸ்.!வாட்ஸ்அப் சாட் டெலிட் ஆகாமல் நம்பரை மாற்றுவது எப்படி? WhatsApp சிம்பிள் டிப்ஸ்.!

கார்த்திகை பூர்ணிமாவுடன் நிகழும் கிரகணம்

கார்த்திகை பூர்ணிமாவுடன் நிகழும் கிரகணம்

இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் கார்த்திகை பூர்ணிமாவுடன் சேர்ந்து நிகழ இருக்கிறது. இந்த நிகழ்வானது இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி, மாலை 5.22 மணிக்கு நிறைவு பெற இருக்கிறது. அதேபோல் மாலை 3.13 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும்.

அடிவானத்துக்கு கீழே நடக்கும் கிரகணம்

அடிவானத்துக்கு கீழே நடக்கும் கிரகணம்

மேலும் இன்று நிகழ இருக்கும் கிரகணம் அடிவானத்துக்கு கீழே நடக்கிறது. எனவே நம்நாட்டில் தெளிவாக தெரிய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் இது என கூறப்பட்டாலும் டிசம்பர் மாத்தில் அடுத்த கிரகணம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருவிகள் உதவியில்லாமல் பார்க்க வாய்ப்பில்லை

கருவிகள் உதவியில்லாமல் பார்க்க வாய்ப்பில்லை

இந்த நிலவு மறைப்பு கருவிகள் உதவியில்லாமல் பார்க்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் கார்த்திகை பூர்ணிமாவுடன் சேரந்து நிகழ இருக்கிறது.

Fileimages

Best Mobiles in India

English summary
Chandra Grahan 2020 Dates and Time in Tamil: How and Where to Watch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X