தம்பி படிச்சது 10-வது தான்: இந்தியா முழுவதும் 1352 சைபர் திருட்டு வழக்குகள்: வசமாக சிக்கியது எப்படி தெரியுமா?

|

மால்வேர், சைபர் தாக்குதல், வைரஸ், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் சைபர் திருட்டு வழக்கில் பல மாநில காவல்துறையால் தேடப்பட்டு வந்த இளைஞர் ஒருவர் சண்டிகர் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 ஃபதேஹோபாத் பகுதியை சேர்ந்தவர் விகாஸ்

ஹரியானாவில் உள்ள ஃபதேஹோபாத் பகுதியை சேர்ந்தவர் விகாஸ் என்கிற விக்கி குமார். குறிப்பாக 10-வரை மட்டுமே படித்திருக்கும்
விகாஷ் மீது இந்தியா முழுவதும் சுமார் 1352 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அத்தனையும் சைபர் திருட்டு வழக்குகள்
என்பது குறிப்பிடத்தக்கது.

இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!

 பல மாநில காவல்துறையினர் வி

அதேபோல் பல மாநில காவல்துறையினர் விக்கி குமாருக்கு வலைவீசி வந்த நிலையில் இப்போது சண்டிகர் மாநில காவல்துறையினால்
கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சமீபத்தில் குர்ஜீத் கவுர் (46) என்ற பெண்மணிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போன் செய்த விகாஸ்,
தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும் கிரெடிட் கார்டு குறித்து விபரங்களை உடனடியாக தராவிட்டால் கார்டு பிளாக் ஆகிவிடும் என்று
கூறியுள்ளார்.

அப்படி இருக்கு- சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவி அறிமுகம்: எக்ஸ் பாதுகாப்பு, தெளிவான பேஸ் சவுண்ட்!அப்படி இருக்கு- சோனி பிராவ்யா 32W830K கூகுள் டிவி அறிமுகம்: எக்ஸ் பாதுகாப்பு, தெளிவான பேஸ் சவுண்ட்!

குர்ஜீத் கவுர் கிரெடிட் கார்டு விபரங்களை

உடனே குர்ஜீத் கவுர் கிரெடிட் கார்டு விபரங்களை அளித்திருக்கிறார். பின்பு சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் 83,979 ரூபாய் மர்மான முறையில் எடுக்கப்பட்டது அவரை அதிர வைத்திருக்கிறது. இதை தொடர்ந்து காவல்நிலையம் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார் குர்ஜீத் கவுர்.

20 ஆண்டு பெருமை., ஒரு சகாப்தத்தின் முடிவு 20 ஆண்டு பெருமை., ஒரு சகாப்தத்தின் முடிவு "உங்களுக்கு இறுதி வாய்ப்பு"- ஆப்பிள் ஐபாட்கள் உற்பத்தி நிறுத்தம்!

 புகார் அடிப்படையில்

மேலும் இந்த புகார் அடிப்படையில் விசாரணையை துவங்கிய சண்டிகர் மாநில சைபர் கிரைம் விசாரணை பிரிவை சேர்ந்த அதிகாரிகள். அவரது போன் நம்பரை டிராக் செய்து 23 வயதாக விக்கி குமாரை கைது செய்துள்ளனர். பின்பு அவரிடம் இருந்து 3 மொபைல் போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.

iPhone 13: மீண்டும் நீங்கள் எதிர்பார்க்காத விலைகுறைப்பு: புதிய விலை மற்றும் கூடுதல் சலுகை விபரம் இது தான்..iPhone 13: மீண்டும் நீங்கள் எதிர்பார்க்காத விலைகுறைப்பு: புதிய விலை மற்றும் கூடுதல் சலுகை விபரம் இது தான்..

இவரது தகவல்களை மத்திய சைபர்

குறிப்பாக இவரது தகவல்களை மத்திய சைபர் கிரைம் பிரிவுக்கு அளித்த அதிகாரிகளுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விகாஸ் மீது ஏற்கனவே 1352 சைபர் வழக்குகள் இருப்பதாக மத்திய சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

குற்றம் குற்றமே., பிழையை திருத்தனும்: டுவிட்டரில் நீ சொன்ன அம்சம் எங்கே?- குற்றம் குற்றமே., பிழையை திருத்தனும்: டுவிட்டரில் நீ சொன்ன அம்சம் எங்கே?- "மகனிடம் கேள்வி எழுப்பிய மஸ்க் தாய்"

 3மொபைல் போன்களை பயன்படுத்தி

அதேபோல் 3 மொபைல் போன்களை பயன்படுத்தி தான் இத்தனை திருட்டிலும் விக்கி ஈடுபட்டு வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடன் தொடர்புடைய 4 பேர்கொண்ட கும்பலை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். குறிப்பாக கொள்ளையடித்த பணத்தில் சொகுசு கார் உள்ளிட்டவற்றை விக்கி குமார் வாங்கியுள்ளதாகவும், பின்பு போலி முகவரி கொடுத்து வாங்கிய சிம்கார்டுகளின் மூலம் அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இவருக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

News Source: hindustantimes.com

image courtesy:hindustantimes.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Chandigarh police have arrested a youth involved in 1,352 cyber fraud cases: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X