மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு- ஐபோனுக்கு போட்டியாக களமிறங்கும் Nothing Phone(1): அறிமுக தேதி, அம்சம், விலை!

|

லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் ஜூலை 12 ஆம் தேதி நத்திங் நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு சந்தைகளில் Nothing Phone (1) சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் பிளிப்கார்ட் மூலமாக கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நத்திங் போன் (1) அறிமுகமாவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், பிராண்ட் அதன் முதல் ஸ்மார்ட்போனின் புதிய அம்சங்கள் மற்றும் திறன்கள் குறித்து டீஸ் செய்துள்ளது. நத்திங் போன் (1) குறித்து புதிய டீஸர் போன்ற புகைப்படத்தை பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. இது வரவிருக்கும் நத்திங் போன் (1) தரத்தை குறிக்கிறது. இந்த படத்தின் படி நத்திங் போன் (1) ஆனது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 போன்ற உள்கட்டமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

வெளியான தகவல்களின் படி, நத்திங் போன் (1) பிரத்யேக வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் என இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அதேபோல் ஒற்றை எல்இடி பிளாஷ் உடன் முதன்மையான தோற்றத்தில் இந்த சாதனம் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 போன்ற பிளாட் பேனல் டிஸ்ப்ளே இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படும்

குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படும்

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அதே சமயத்தில் நத்திங் போன் (1) ஆனது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் வெளியாகக்கூடும் எனவும் மெமரி விரிவாக்கத்திற்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

நத்திங் போன் (1) ஆனது 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வெளியாகும் என சமீபத்திய கசிவுகள் தெரிவித்தன. அதேபோல் இந்த சாதனம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதை பிராண்ட் முன்னதாகவே உறுதிப்படுத்தியது. நத்திங் போன் (1) சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் மூலம் விற்பனை

பிளிப்கார்ட் மூலம் விற்பனை

நத்திங் போன் (1) விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ரூ.30,000 விலைப்பிரிவில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. அதேபோல் பிளாக் மற்றும் வைட் வண்ண விருப்பத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு கொண்ட அடிப்படை வேரியண்ட் இந்த சாதனத்தில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் (1) இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.

முதல் ஸ்மார்ட்போனான போன்(1)

முதல் ஸ்மார்ட்போனான போன்(1)

Nothing Phone 1 குறித்து முன்னதாக வெளியான அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம். லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், அதன் முதல் ஸ்மார்ட்போனான போன்(1)-ஐ அறிமுகப்படுத்த தயாராகி இருக்கிறது. இருப்பினும் நத்திங் ஃபோன் (1) என்பது நிறுவனத்தின் தயாரிப்பு அமைப்பின் கீழ் வரும் இரண்டாவது சாதனமாகும் முன்னதாக இந்த நிறுவனம் Ear(1) என்ற இயர்பட்ஸை தயாரித்து அறிமுகம் செய்தது.

ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டி

ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டி

கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடைபெற்ற நத்திங் நிகழ்ச்சியில் அதன் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய், நத்திங் போன் 1 குறித்து அறிவித்தார். இந்த நிகழ்வில் நத்திங் ஓஎஸ் இயங்குதளமும் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் நிறுவனத்தின் சாதனம் ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டியாக வரும் என இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் கார்ல் பெல் கூறுகையில், 300 பேர் கொண்ட குழுவை உருவாக்கி குவால்காம் டெக்னாலஜிஸ் போன்ற நம்பகமான கூட்டாளர்களின் ஆதரவை பெற்று தூக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை விதைக்க போன் (1) அறிமுகம் செய்ய உள்ளோம் என குறிப்பிட்டார்.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஸ்

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஸ்

ஸ்மார்ட்போன் சந்தை அபார வளர்ச்சியை கண்டிருக்கிறது, இருப்பினும் அவை எதுவும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் எனது எதிர்பார்ப்பு தனது பயனர்கள் உடையது எனவும் கூறினார். அவர்கள் விரும்பும் புதிய கண்டுபிடிப்புகள் தற்போதுவரை வெளிவரவில்லை. அதேபோல் சிறந்த போன்கள் வெளியிடும் பிராண்டுகள் என வாடிக்கையாளர்கள் ஒரு சிலவற்றை மட்டுமே நம்பி இருக்கின்றனர் ஆனால் அவைகள் பயனர்களுக்கு என புதிய மாற்றம் எதையும் அறிமுகம் செய்யவில்லை. குறிப்பிட்ட சில மாற்றங்களை மட்டுமே செய்து புதிய ஸ்மார்ட்போன் என சந்தையில் அறிமுகம் செய்கின்றனர். இந்த நிலையை மாற்றம் செய்வதற்கு என நத்திங் வருகிறது. இதற்கு என பிரத்யேகமாக ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என நத்திங் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய் தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Challenge For Iphone: Nothing Phone(1) set to Launch in india on July 12 and Sale Via Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X