Home
News

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க: எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அமேசான் கொடுத்த ஒரு அதிசய பொருள்!

தற்போது ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தான் சிறந்தது என்ற முடிவுக்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வந்து விட்டனர்.

குறிப்பாக ஆன்லைன் தளங்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். ஆனால் கடைகளில் அவ்வளவு சலுகைகள் கிடைக்காது. இதுதவிர பண்டிகை காலங்களில் ஆன்லைன் தளங்களில் அதீத சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே தான் மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

டூத்பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அமேசான் கொடுத்த ஒரு அதிசய பொருள்!

அதேபோல் எந்த பகுதியில் இருந்தாலும் இருந்த இடத்திலேயே எந்த ஒரு பொருளையும் சுலபமாக ஆர்டர் செய்யலாம். ஆன்லைன் ஆர்டர்கள்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனாலும் குவியும் கோடிக்கணக்கான ஆர்டர்களில் ஒரு சிலவற்றில் குழப்பங்கள் ஏற்படுவது நிறுவனங்களுக்குச் சிக்கலாக அமைகிறது. ஒரு சிலவற்றில் பிழைகள் என்பது இயல்பு தானே என்றாலும் ஆர்டர் செய் பொருளுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைப் பெறுவது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது அப்படியான ஒரு நிகழ்வைத் தான் பார்க்கப் போகிறோம்.

எலெக்ட்ரிக் டூத்பிரஷ்
அதாவது மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அமேசான் தளத்தில் ரூ.12,000 விலை உள்ள எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த எலெக்ட்ரிக் டூத்பிரஷ்-க்கு பதிலாக மசாலா பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

டூத்பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அமேசான் கொடுத்த ஒரு அதிசய பொருள்!

ஏமாற்றம் அடைந்த அந்த பெண்மணியின் மகள் ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றிப் பதிவிட்டுள்ளார். அதில் அன்புள்ள அமேசான், ஒரு வருடத்திற்கும் மேலாக பயனர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் விற்பனையாளரை ஏன் இன்னும் நீக்கவில்லை, என் அம்மா 12000 ரூபாய்க்கு ஓரல்-பி டூத்பிரஷ் ஆர்டர் செய்தார்.

ஆனால் எலெக்ட்ரிக் டூத்பிரஷ்-க்கு பதிலாக 4எம்டிஹெச் சாட் மசாலா பெட்டிகளை அனுப்பி இருக்கிறார்கள். MEPLTD விற்பனையாளர் ஜனவரி 2022 முதல் அமேசானில் ஆர்டர் செய்பவர்களை இவ்வாறு ஏமாற்றிவருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதவிர குற்றம்சாட்டியுள்ள விற்பனையாளர் பற்றி அமேசான் தளத்திலேயே மற்ற வாடிக்கையாளர்கள் கூறியுள்ள புகார்களின் ஸ்க்ரீன்ஷாட்டை கூட அந்த பெண் இணைத்துள்ளார்.

மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் விற்பனையாளரைப் பற்றி ஆராய்ந்து, யோசித்துப் பார்த்து ஆர்டர் செய்வது நல்லது என அந்த பெண் எச்சரித்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் பதிவு அதிகமாக ரீட்விட் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் பலரும் தங்களது அனுபவங்களைக் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டூத்பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அமேசான் கொடுத்த ஒரு அதிசய பொருள்!

இதில் ஒருவர் 2021-ம் ஆண்டு நானும் எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஆரட் செய்தேன். ஆனால் எனக்கு சாதாரண டூத்பிரஷ்தான் அனுப்பினார்கள். அதுவும் இதே விற்பனையாளர். இப்போது பெயரை மாற்றிக்கொண்டுவிட்டர்கள் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

புறக்கணித்துவிட முடியாது
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் எதையும் வேண்டாம் என்று புறக்கணித்துவிட முடியாது. காலத்தோடு ஒன்றி ஓடுவது அவசியமாக இருக்கிறது. அதே சமயத்தில் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம். அதாவது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் பெறப்படும் கோடிக்கணக்கான ஆர்டர்களில் ஒரு சில பிழைகள் இயல்பு என்றாலும் அதற்கு நிறுவனம் தரப்பில் இருந்து கிடைக்கும் சரியான பதிலையும் தீர்வையும் தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Best Mobiles in India

English summary
chaat masala sent to woman who ordered electric toothbrush worth Rs 12,000 on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X