பறிக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் விருதை போராடி பெற்ற லாரா டிகார்லோ.!

விருதை திரும்பவழங்குவது தொடர்பான அறிக்கையில் சிடிஏவின் மார்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஜேன் போஸ்டர் கூறியதாவது, "சிடிஏ இந்த விருதை சரியாக கையாளவில்லை.

|

பிரபல சிஇஎஸ் வருடாந்திர டெக் ஷோவை நடத்திவரும் நுகர்வோர் தொழில்நுட்ப சங்கம் (Consumer Technology Association - CTA), பெண்கள் பாலியல் பொம்மையான ஓஸ்(Osé)-க்கு வழங்கப்பட்ட ரோபாட்டிக்ஸ் புதுமை கண்டுபிடிப்பு விருதை திரும்பப்பெற்றதன் காரணமாக, இந்த ஆண்டின் துவக்கத்தில் அந்த சங்கத்தின் மீது சீற்றமும் மற்றும் நம்பிக்கையற்ற தன்மையும் நிலவியது.

இப்போது சரியாக நான்கு மாதங்கள் கழித்து, ஓஸ் பொம்மையின் உற்பத்தியாளரான லாரா டிகார்லோ, சிடிஏ சங்கத்திற்கு அதன் படுதோல்வி குறித்து விளக்கி கடுமையான திறந்த கடிதத்தை எழுதியதன் காரணமாக, அந்த சங்கம் தனது முடிவிலிருந்து பின்வாங்கியதுடன் (மீண்டும்), அந்த விருதை திரும்ப வழங்கியுள்ளது.

பறிக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் விருதை போராடி பெற்ற  லாரா டிகார்லோ.!

முதலில் வழங்கப்பட்ட விருதை திரும்பப்பெறும் போது, " இந்த கலப்பு பாலியல் சாதனம் புதுமை கண்டுபிடிப்பு விருதுக்கு தகுதியற்றது மற்றும் விருது தேர்வு முறையில் இந்த படிநிலைக்கு வந்திருக்க கூடாது. ஏனெனில் சி.டி.ஏ மூலம் தேர்வு செய்யப்படுபவை தனித்துவமான, ஒழுக்கக்கேடு, ஆபாசம், அழிவு போன்றவை இல்லாமல் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாதவை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை காரணம்காட்டி விருது திரும்பப்பெறப்படுகிறது" என தெரிவித்தது.

சிஇஎஸ் தொடர்ந்து ஆண்களுக்கான பாலியல் பொம்மைகள் மற்றும் ரோபோட்கள், ஆண்களை மையப்படுத்திய விஆர் ஆபாசபடம் போன்றவற்றை அனுமதிக்கும் போது,ஏன் பெண்களுக்கான பாலியல் பொம்மைகள் ஒழுக்கக்கேடாக கருதப்படுகிறது என லோரா டிகார்லோ மற்றும் பல ஆன்லைன் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விருதை திரும்பவழங்குவது தொடர்பான அறிக்கையில் சிடிஏவின் மார்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஜேன் போஸ்டர் கூறியதாவது, "சிடிஏ இந்த விருதை சரியாக கையாளவில்லை. இது சில முக்கியமான உள்ளார்ந்த மற்றும் வெளி ஆலோசகர்களுடனான உரையாடல்களுக்கு தூண்டியது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இந்த படிப்பினையை நாங்கள் எதிர்நோக்குகிறோம். " என தெரிவித்துள்ளார்.

விருதை திரும்பவழங்கியதற்காக தனது நன்றியுணர்வை வெளிப்படுத்திய லோரா டிகார்லோ நிறுவனர் லோரா ஹடாக் கூறியதாவது "எங்கள் அனுபவத்தை அடுத்து நாங்கள் நம்பமுடியாத ஆதரவு மற்றும் கவனம், அர்த்தமுள்ள மாற்றங்களுக்கு தேவையான சிறப்பம்சத்தை விவரிக்கிறது. மேலும் எங்களது சிறிய நிறுவனம் தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும்" என கூறினார்.

பறிக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் விருதை போராடி பெற்ற  லாரா டிகார்லோ.!

ஜனவரி 2020 இல் நடைபெறவுள்ள அடுத்த லாஸ் வேகாஸ் நிகழ்ச்சிக்கு புதுப்பிக்கப்பட்ட கொள்கைகள் அறிவிக்கப்படும் என்றும் சிடிஏ கூறியுள்ளது. சேர்க்கப்பட்டது. ஆனால் விருதை மீண்டும் வழங்குவதற்கு ஏன் நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டது என்று அந்த அறிக்கை விளக்கவில்லை.

Best Mobiles in India

English summary
CES re-awards revoked robotics prize to womens sex toy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X