அதீத சக்தி, மேம்பட்ட திறன்- என்விடியா அறிமுகம் செய்த நான்கு ஆர்டிஎக்ஸ் ஜிபியூகள்!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட CES 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் NVIDIA அதிகாரப்பூர்வமாக நான்கு புதிய ஜிபியூ-களை அறிவித்துள்ளது. NVIDIA நிறுவனம் இரண்டு புதிய ஜிபியூ-களை வெளியிட்டிருக்கிறது. அது ஆர்டிஎக்ஸ் 3080 டிஐ லேப்டாப் மற்றும் ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப் ஆகும்.நிறுவனம் மிகவும் விலையுயர்ந்த ஆர்டிஎக்ஸ் 30 தொடர் ஜிபியூ-களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை ஆர்டிஎக்ஸ் 3050 மற்றும் ஆர்டிஎக்ஸ் 3090 டிஐ ஆகும். CES 2022 நிகழ்வில் NVIDIA GeForce ஆர்டிஎக்ஸ் 3050, 3070 டிஐ லேப்டாப், 3080 டிஐ லேப்டாப் மற்றும் ஆர்டிஎக்ஸ் 3090 டிஐ ஜிபியூகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

NVIDIA ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3080டி லேப்டாப்

NVIDIA ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3080டி லேப்டாப்

NVIDIA ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3080டி லேப்டாப் ஆனது NVIDIA நிறுவனம் வழங்கும் மிகவும் சக்தி வாய்ந்த லேப்டாப் ஜிபியூ ஆகும். இது 16 ஜிபி ஜிடிடிஆர்6 வீடியோ நினைவகத்தை வழங்குகிறது. அதேபோல் NVIDIA ஆர்டிஎக்ஸ் டைட்டன் ஆனது கிராபிக்ஸ் கார்டையும் மிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ஆர்டிஎக்ஸ் 3080 டிஐ ஜிபியூ கொண்ட லேப்டாப்களின் ஆரம்ப விலை 2499 டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.

NVIDIA GeForce ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப்

NVIDIA GeForce ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப்

NVIDIA GeForce ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப் என்பது மடிக்கணினிகளுக்கான மற்றொரு உயர் செயல்திறன் கொண்ட 1440பிக்சல் கிளாஷ் ஜிபியூ ஆகும். ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப் ஆனது ஆர்டிஎக்ஸ் 2070 சூப்பர் லேப்டாப் ஜிபியூ-ஐ விட 70 சதவீதம் வேகமானதாக இருக்கிறது. இது 1440 பிக்சல் தெளிவுத்திறன் உடன் பெரும்பாலான கேம்களில் 100 எஃப்பிஎஸ்-க்கு மேல் வழங்குகிறது. ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ சிப்செட் பொருத்தப்பட்ட லேப்டாப்களின் விலை ஆனது 1499 டாலர் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆர்டிஎக்ஸ் 3080 டிஐ லேப்டாப் அல்லது ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப்

ஆர்டிஎக்ஸ் 3080 டிஐ லேப்டாப் அல்லது ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப்

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் பிப்ரவரி 1 முதல் ஆர்டிஎக்ஸ் 3080 டிஐ லேப்டாப் அல்லது ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப் உடன் மடிக்கணினிகளை வாங்கலாம். அதுமட்டுமின்றி உள்ளடக்கத்தை உருவாக்கம் செய்பவர்களுக்கு என 3டி முறைகளை கையாள உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை என்விடியா ஸ்டுடியோ மடிக்கணினிகளை என்விடியா அறிமுகம் செய்துள்ளது. இந்த இயங்குதளத்துடன் ஆசஸ், எம்எஸ்ஐ மற்றும் ரேசர் போன்ற ஓஇஎம்களின் மடிக்கணினிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஆர்டிஎக்ஸ் 3080 டிஐ மற்றும் ஆர்டிஎக்ஸ் 3070 டிஐ லேப்டாப் ஜிபியூ இடம்பெறும் என கூறப்படுகிறது.

என்விடியா ஜியிஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050

என்விடியா ஜியிஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050

என்விடியா ஜியிஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 என்பது ஆர்டிஎக்ஸ் தொடரின் மிகவும் விலை உயர்ந்த ஜிபியு ஆகும். இந்த விலை இந்தியாவில் ரூ.22,200 ஆக இருக்கும். இந்த ஜிபியூ ஆனது டெஸ்க்டாப்-க்கு நிகழ்நேர ரே-டிரேசிங்கை வழங்குகிறது. 1080 பிக்சல் தெளிவுத்திறன் உடன் டிரிபிள் ஏஏஏ தலைப்புகளில் 60 எஃப்பிஎஸ் ரே-டிரேசிங்கை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது பட்ஜெட் ஜிபியூ ஆக இருந்தாலும் இது 8ஜிபி ஜிடிடிஆர்6 நினைவகத்தை வழங்குகிறது. ஜிபியூ ஆனது டிஎல்எஸ்எஸ் போன்ற கூடுதல் NVIDIA தொழில்நுட்பங்களை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஜனவரி 27 முதல் இந்தியாவிலும் உலகம் முழுவதும் கிராஃபிக்ஸ் கார்ட்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

NVIDIA GeForce ஆர்டிஎக்ஸ் 3090 டிஐ

NVIDIA GeForce ஆர்டிஎக்ஸ் 3090 டிஐ

அதேபோல் NVIDIA ஆனது வரவிருக்கும் ஆர்டிஎக்ஸ் 3090 டிஐ ஜிபியூ காட்சிகளை வழங்குகிறது. இந்த ஜிபியூ ஆனது 40 ஷேடர் டெராஃப்ளாப்கள், 78 ஆர்டி டெராஃப்ளாப்கள் மற்றும் 320 டென்சர் டெராஃப்ளாப்கள் உடன் வரும் என பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஜிபியூ ஆனது 24 ஜிபி நினைவகத்தை வழங்குகிறது. ஆர்டிஎக்ஸ் 3090 டிஐ கூடுதல் விவரங்கள் ஜனவரி 2022 இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
CES 2022: NVIDIA GeForce Launched its RTX 3050, 3070Ti Laptop, 3080 Ti Laptop, 3090 TI GPUs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X