CES 2022: வெளிப்புற ஜிபியு, 4k டிஸ்ப்ளே உடன் ஆசஸ் கேமிங் டேப்லெட் அறிமுகம்- வேற லெவல் சக்தி வாய்ந்த அம்சங்கள்!

|

CES 2022 நிகழ்வில் வெளிப்புற ஜிபியூ ஆதரவுடன் ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட் 13 கேமிங் டெப்லெட் ஆனது 4கே டிஸ்ப்ளே ஆதரவோடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள்

ஆசஸ் ஆர்ஓஜி தொடரில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உட்பட பல சாதனங்கள் கேமிங் அமைப்பை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரிபப்ளிக் ஆஃப் கேமர்ஸ் தொடர் தற்போது சிஇஎஸ் 2022-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய அறிமுகத்துடன் டேப்லெட் சந்தையில் அடியெடுத்து வைத்திருக்கிறது நிறுவனம். புதிய ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 சாதனமானது கேமிங் டேப்லெட் ஆகும் இது விண்டோஸ் மூலம் இயங்கும் சமீபத்திய சலுகை மற்றும் தனிப்பயனாக்கலுக்கான வெளிப்புற ஜிபியூ ஆதரவை உள்ளடக்கி இருக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13

ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13

ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 சாதனத்தின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த டேப்லெட் ஆனது கேமிங் அம்சத்தில் புதிய பரிமானத்தை கொண்டிருக்கிறது. CES 2022 நிகழ்வில் ஆசஸ்-ன் முதல் சாதனமாக அதன் கேமிங் டேப்லெட் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 டேப் ஆனது கிக்ஸ்டாண்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அம்சமானது எந்த வெளிப்புற ஆதரவும் தேவையில்லாமல், அதன் மேற்பரப்பில் டேப்பை சரிசெய்ய கேமர்களை அனுமதிக்கிறது.

13.4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

13.4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

புதிய ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 டேப்லெட் ஆனது 13.4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் 1080 பிக்சல்கள் தெளிவுத்திறன் உடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. மேலும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 4கே தெளிவுத்திறனை இது கொண்டிருக்கிறது. இரண்டு வகைகளிலும் ஆர்ஜிபி பின்னொளியுடன் பிரிக்கக்கூடிய கீபோர்ட் மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் உறுதியான மற்றும் அடர்த்தியான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 சிறப்பம்சங்கள்

ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 சிறப்பம்சங்கள்

ஹூட்டின் கீழ் ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 ஆனது சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட கேமிங் விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது. என்விடியா ஆர்டிஎக்ஸ் 3050 டிஐ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட இன்டெல் கோர் ஐ9- 12900எச் செயலி மூலம் டேப் இயக்கப்படுகிறது. மிக முக்கியமாக, டேப் அம்சங்கள் வெளிப்புற ஜிபியு ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தின் மூலம் விளையாட்டாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவை அனுபவிக்க அனுமதிக்கிறது.

கேமிங் பிரியர்களுக்கான வரப் பிரசாதம்

கேமிங் பிரியர்களுக்கான வரப் பிரசாதம்

இதில் ஆசஸ் எக்ஸ்ஜி மொபைல் இஜிபியூ கிட் வசதி இருக்கிறது. கேமர்களை ஆர்டிஎக்ஸ் 3080 அல்லது ரெடிஆன் ஆர்எக்ஸ் 6850எம் எக்ஸ்டி ஜிபியூ உடன் டேப்பை இணைக்க அனுமதிக்கிறது. இது தண்டர்போல்ட் 4 போர்ட், டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு யூஎஸ்பி சி 3.2 ஜென் 2, மைக்ரோஎஸ்டி கார்ட் ரீடர், எச்டிஎம்ஐ 2.0 போர்ட் மற்றும் ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல போர்ட்களை கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆனது கேமிங் பிரியர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் என்றே கூறலாம். பல்வேறு பிரத்யேக அம்சங்களுடன் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டேப்லேட் என்பது பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக இருக்கிறது. ஆசஸ் நிறுவனம் தற்போது சக்தி வாய்ந்த டேப்லெட்டை அறிமுகம் செய்து டேப்லெட் சந்தையில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

100 வாட்ஸ் வரை பிடி சார்ஜிங் அம்சம்

100 வாட்ஸ் வரை பிடி சார்ஜிங் அம்சம்

ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 ஆனது 100 வாட்ஸ் வரை பிடி சார்ஜிங் அம்சத்தை உள்ளடக்கியது. கேமை மையப்படுத்திய டேப்லெட் ஆனது 2022 இரண்டாம் காலாண்டில் கிடைக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆசஸ் ஆர்ஓஜி ஃப்ளோ இசட்13 சாதனத்தின் விலை குறித்த விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த புதிய டேப் ஆனது ப்ரீமியம் விலைக் குறியுடன் கூடிய உயர்நிலை சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
CES 2022: Asus ROG Flow Z13 Gaming Tablet Launched with 4K Display, External GPU Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X