சிஇஎஸ் 2018 : அசத்தலான சாம்சங் தி வால், 8கே டிவி, நோட்புக் 7 ஸ்பின் அறிமுகம்.!

சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இந்த க்யு9எஸ் 8கே டிவி மாடலை வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் க்யு9எஸ் 8கே டிவி.

By Prakash
|

சாம்சங் நிறுவனம் சிஇஎஸ் 2018(CES 2018) தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல நிறுவனங்களின் சாதனங்கள் சிஇஎஸ் 2018-இல் நிகழ்சியில் அறிமுகப்படுத்தப்படும்.. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களை விட இப்போது புதிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங்.

சிஇஎஸ் 2018 : அசத்தலான சாம்சங் தி வால், 8கே டிவி, நோட்புக் 7 ஸ்பின் அ

இந்த சாதனங்கள் அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங் நிறுவனம் சிஇஎஸ் 2018 நிகழ்சியில் அறிமுகப்படுத்திய புதிய சாதனங்களை பார்ப்போம்.

சாம்சங் தி வால்:

சாம்சங் தி வால்:

உலகின் முதல் மைக்ரோ எல்இடி டிவி என்ற பெயரை கொண்டுள்ளது சாம்சங் தி வால், இந்த எல்இடி டிவி பொறுத்தவரை அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் சாம்சங் தி வால்146- இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, ஸ்கோர்போர்டுகள் மற்றும் ஜம்போ திரைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்துடன் இந்த எல்இடி டிவி வெளிவந்துள்ளது.

சாம்சங் க்யு9எஸ் 8கே டிவி:

சாம்சங் க்யு9எஸ் 8கே டிவி:

சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இந்த க்யு9எஸ் 8கே டிவி மாடலை வெளியிட்டுள்ளது சாம்சங்
நிறுவனம். சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் க்யு9எஸ் 8கே டிவி. இந்த டிவி மாடல் பொறுத்தவரை 8கே தீர்மானம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது.

நோட்புக் 7 ஸ்பின் & நோட்புக் 9 ஸ்பின்  :

நோட்புக் 7 ஸ்பின் & நோட்புக் 9 ஸ்பின் :

சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நோட்புக் 7 ஸ்பின் பொறுத்தவரை இந்த சாதனம் 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்டுள்ளது. அதன்பின்பு 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5பிராசஸர் மற்றும் 8ஜிபி மெமரி உள்ளிட்டவை இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு நோட்புக் 9 ஸ்பின் நோட்புக் 9 ஸ்பின் பொறுத்தவரை 15-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது.

சாம்சங் மென்பொருள்:

சாம்சங் மென்பொருள்:

சாம்சங் SmartThings கிளவுட் அனைத்து சாம்சங் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் தயாரிப்புகள் வேலை செய்யும். மேலும்கார்கள் பயன்படுத்தக்கூடிய ஹர்மன் இக்னிட் கிளவுட்-ஐ ஒருங்கிணைக்கிறது. SmartThings ஆப் பயன்பாடு கேமராக்கள் போன்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்த ஒரு மையமாக செயல்படும்,மேலும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கு மிக அருமையாக
பயன்படும் இந்த SmartThings ஆப் பயன்பாடு.

ஸ்பீக்கர்:

ஸ்பீக்கர்:

சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் சாம்சங் என்டபள்யு700 ஸ்பீக்கர்அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஸ்லீம்லைன் 3.1-சேனல் சவுண்ட் பார் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு டிஸ்ஆர் டிஜிட்டல் சிக்னலைப் பயன்படுத்துகிறது. சுவரில் பொருத்தப்படக்கூடிய மெலிதான வடிவில் வெளிவந்துள்ளது சாம்சங் என்டபள்யு700 ஸ்பீக்கர்.

சாம்சங் விஎல்5 வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியது இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் இரண்டு அடி நீளமும் இரண்டு அடி அகலம் கொண்டுள்ளது, இது ஏ.கே.ஜி, சாம்சங் சமீபத்திய கையகப்படுத்தல் இருந்து சரிப்படுத்தும் ஸ்டூடியோ தர ஒலி வழங்குகிறது. அதன்பின்பு இவற்றில் மூன்று 5 அங்குல woofers மற்றும் இரண்டு tweeters உள்ளன.

மற்றவை:

மற்றவை:

எக்ஸிநோஸ் 9810 செயலி கொண்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிப்செட்-ஐ சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில்
காட்சிப்படுத்தப்பட்டது. போர்ட்டபிள் ஸ்பீக்கர் வரிசையில், மினி ஸ்பீக்கர், நெக் பென்ட் ஸ்பீக்கர், மற்றும் பல்வேறு தயாரிப்புகள் சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
CES 2018 Samsung unveils The Wall 8K TV Notebook 7 Spin and more ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X