சென்போன் ஏஆர் : 6ஜிபி ரேம், 23 எம்பி கேமிரா, 3100 எம்ஏஎச் பேட்டரி.!
சிஇஎஸ் 2017-ல் அசுஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக சென்போன் ஏஆர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தைவான் நாட்டை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் உலகின் முதல் 8ஜிபி ஸ்மார்ட்போன் அதன் சென்போன் ஏஆர் ஸ்மார்ட்போனை சிஇஎஸ் 2017-ல் அறிமுகம் செய்துள்ளது. டேங்கோ செயல்படுத்தப்பட்ட இக்கருவி ஒரு பகற்கனவு- தயாரிப்பு என்றே கூறலாம்.
டேங்கோ என்பது கூகுளின் சென்சார்கள் மற்றும் தனிப்பட்ட மிகை யதார்த்த மென்பொருள்களின் ஒரு தொகுப்பாகும் இது ஒரு ஸ்மார்ட்போனில் தனிப்பட்ட ஆகுமென்ட்டட் ரியாலிட்டியை வழங்கும் அதாவது ஏஆர் கேமிங், ஏஆர் யூட்டிலிட்டீஸ் மற்றும் இண்டோர் நேவிகேஷன் ஆகியவைகளில் பயனர்களுக்கு ஆகுமென்ட்டட் ரியாலிட் அற்புதமான அனுபவத்தை வழங்கும்.
அசுஸ் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் இக்கருவியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.

டிஸ்ப்ளே, செயலி
அசுஸ் சென்போன் ஏஆர் கருவியானது 1440X2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.70 அங்குல தொடுதிரை டிஸ்ப்ளே உடன் வெளிவருகிறது. உடன் இக்கருவி க்வாட்-கோர் க்குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி மூலம் இயக்கப்படுகிறது

ரேம், கேமிரா
6ஜிபி ரேம் கொண்டுள்ள அசுஸ் சென்போன் ஏஆர் கருவியின் கேமிரா துறையை பொறுத்தவரை ஒரு 23 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் கேமிரா கொண்டுள்ளது.

விலை, ஆண்ட்ராய்டு, பேட்டரி
ரூ.39,999/- என்ற விற்பனை விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபப்டும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்கும் ஒரு 3300எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இரட்டை சிம், சென்சார்
ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) மைக்ரோ சிம் மற்றும் நானோ சிம் ஆதரவு வழங்கும் இக்கருவியில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், என்எப்சி, 3ஜி மற்றும் 4ஜி ஆகிய இணைப்பு வசதிகளும் அடக்கம். உடன் நிக்கருவில் காம்பஸ் மாக்னோமீட்டர், ப்ராக்சிமிட்டி சென்சார், ஆக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாரோமீட்டர் ஆகிய அம்சங்களும் உள்ளன.

அசுஸ் சென்போன் ஏஆர் அம்சங்கள் ஒரு பார்வை
டிஸ்ப்ளே - 5.70 அங்குலம்
செயலி - க்வாட் கோர்
தீர்மானம் - 1440x2560 பிக்சல்கள்
ரேம் - 6ஜிபி
ஓஎஸ் - ஆண்ட்ராய்டு 7.0
முன்பக்க கேமிரா - 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமிரா - 23 மெகாபிக்சல்
பேட்டரி திறன் - 3300 எம்ஏஎச்

மேலும் படிக்க
இரட்டை 12 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி - அசுஸ் சென்போன் 3 ஸூம்.!


Click it and Unblock the Notifications