Android பயனர்கள் அலெர்ட்.. உடனே இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிங்க.. இல்லையெனில் சிக்கல் தான்..
செர்ட்-இன் (CERT-In) என்று அழைக்கப்படும் இந்தியாவின் இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பானது தற்போது ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுவும் இந்த கண்காணிப்பு அமைப்பு ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் பல முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு ஓஎஸ்
அதாவது தற்போது முக்கியமான ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளங்களில் குறைபாடுகள் கண்டறிந்துள்ளது இந்தியாவின் இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு. அதுவும் இந்த குறைபாடு மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, Vulnerability Note CIVN-2025-0202 பாதுகாப்பு குறைபாடு மூலம் ஆண்ட்ராய்டு 13 (Android 13), ஆண்ட்ராய்டு 14 (Android 14), ஆண்ட்ராய்டு 15 ( Android 15) மற்றும் புதிய ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஆகிய இயங்குதளங்கள் பாதிக்கப்படலாம். ஹேக்கர்கள் இந்த பாதிப்புகளைப் பயன்படுத்தினால், அங்கீகாரம் இல்லாமல் ஒரு சாதனத்தை அணுகி, முக்கியத் தகவல்களைத் திருட முடியும். பின்பு தீங்கிழைக்கும் குறியீடுகளை இயக்க (அ) DoS (சேவை மறுப்பு) தாக்குதல் மூலம் சாதனங்களை முழுமையாகச் செயலிழக்கச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக CERT-In அமைப்பு இந்த ஆபத்தை 'ஹை' என மதிப்பிட்டுள்ளது. பின்பு இந்த குறைபாடுகள் ஆண்ட்ராய்டு ஃபிரேம்வொர்க், ஆண்ட்ராய்டு ரன்டைம், சிஸ்டம், வைடுவைன் DRM, மீடியாடெக் மற்றும் குவால்காம் சிப்கள் உட்பட பல முக்கிய கூறுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளங்களில் குறைபாடுகள் காரணமாக ஒப்போ, சாம்சங், சியோமி, மோட்டோரோலா, ஒன்பிளஸ், ரியல்மி, விவோ, மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பல்வேறு பிராண்டுகளின் போன்களும் இந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஆண்ட்ராய்டு பயனர்கள் உடனே உங்களது ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க சில முக்கிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். உங்கள் போன் போன் உற்பத்தியாளர் வழங்கும் சமீபத்திய பாதுகாப்பு அப்டேட்களை உடனே இன்ஸ்டால் செய்யவது நல்லது. பின்பு உங்கள் போனின் செட்டிங்ஸில் உள்ள பாதுகாப்பு பேட்ச் நிலையைச் சரிபார்க்கவும். அது 2025-09-01 அல்லது 2025-09-05 என இருந்தால். பாதுகாப்பாக இருக்கிறீர்கள். இல்லையென்றால், உடனே உங்கள் ஃபோனைப் அப்டேட் செய்யவும்.
அதேபோல் அடையாளம் தெரியாத இணையதளத்தில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். பின்பு உங்கள் போனில் கூகுள் பிளே புரோடெக்ட் (Google Play Protect) எப்போதும் இயங்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களது போன் அதிக வெப்பமடைதல், பேட்டரி விரைவாகத் தீர்ந்துபோதல் அல்லது சந்தேகத்திற்குரிய பாப்-அப்கள் போன்ற அசாதாரண செயல்பாடுகளைக் கவனியுங்கள். குறிப்பாக இந்த எளிமையான நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள், டேட்டா, சாதனத்தையும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் இணையதளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் கிடைக்கும் ஆப்களை டவுன்லோடு செய்யவே கூடாது. குறிப்பாக இந்த வகை ஆப்கள் மூலம் அதிக ஆபத்து வரலாம். ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கும் ஆப்களை டவுன்லோடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








