Home
News

6 மாதமாக ரேஷன் வாங்காதவர்களுக்கு சிக்கல்! அக்.1 முதல் புதிய நடவடிக்கை.. இதோ முழு விவரம்..

தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தி எந்தவொரு அத்தியாவசியப் பொருட்களையும் பெறாமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டு (Ration Card) முடக்கப்படவோ அல்லது தற்காலிகமாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஏழை மற்றும் தகுதி பெற்ற குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச உணவு தானியங்கள், மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

6 மாதமாக ரேஷன் வாங்காதவர்களுக்கு சிக்கல்! அக்.1 முதல் புதிய நடவடிக்கை!

குறிப்பாக இந்த திட்டத்தில் தகுதியானவர்களுக்குத் தொடர்ந்து பயன் கிடைப்பதை உறுதி செய்ய ரேஷன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படுகின்றன. அதுவும் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்தபிறகும் அவரது பெயர் நீடிப்பது, குடும்பம் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளில் இடம்பெறுவது போன்ற காரணங்களால் தரவுகளில் தவறுகள் ஏற்படலாம். எனவே தான் இதுபோன்ற பதிவுகளை கண்டறிந்து நீக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுவும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் வாயிலாக 80.6 கோடி பேர் அரசின் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் பயன்களை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் கடைகளில் எந்தவிதமான பொருட்களையும் பெறாத கார்டுகளுடன் தொடர்புடைய சுமார் 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை அக்டோபர் 1-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுகள் முதற்கட்டமாக தற்காலிகமாக முடக்கப்படும். இருப்பினும், அந்த கார்டுகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக அரசின் தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படாது.

3 மாதங்கள் அவகாசம்: சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது தகுதியை உறுதி செய்வதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலக்கெடுவுக்குள் இ-கே.ஒய்.சி. செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தகுதியை சரிபார்ப்பார்கள். தகுதி உறுதி செய்யப்பட்ட பின்னர், முடக்கப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டு, தொடர்ந்து உணவு தானியங்கள் வழங்கப்படும்.

இந்த நடவடிக்கை மூலம் ரேஷன் கார்டுகளை உடனடியாக நிரந்தரமாக ரத்து செய்வதற்கு பதிலாக, முதற்கட்டமாக தற்காலிகமாக முடக்கி, பயனாளிகள் தங்களது தகுதியை நிரூபிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்வதோடு, முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2024-ல் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கம்
ரேஷன் கார்டு தொடர்பான தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வது, ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் இ-கே.ஒய்.சி. உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரவுகளைச் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது.

6 மாதமாக ரேஷன் வாங்காதவர்களுக்கு சிக்கல்! அக்.1 முதல் புதிய நடவடிக்கை!

மேலும், கடந்த ஜூலை 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கான இ-கே.ஒய்.சி. பணிகள் 90.64 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய உணவுத்துறை கூறியுள்ளது.

இகேஒய்சி அப்டேட்
நாளை முதல் நாடு முழுவதும் 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகள் தற்காலிகமாக முடக்கப்பட உள்ள நிலையில், எந்த மாநிலத்தில் எத்தனை ரேஷன் கார்டுகள் பாதிக்கப்படும் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட பயனாளிகள் 3 மாதங்களுக்குள் இ-கே.ஒய்.சி. பணியை நிறைவு செய்து, தேவையான கள ஆய்விலும் தகுதியை உறுதி செய்தால், அவர்களது ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Centre to Disable 15.8 Million ‘Inactive’ Ration Cards from October 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X