தமிழகத்தில் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு- இதுதான் காரணம்?

|

தமிழகத்தில் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாக மத்திய அரசு சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பது காந்தியடிகளின் நிலைப்பாடு. ஏனெனில், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விவசாயம் அங்குதான் உள்ளது. கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பது பொதுக் கருத்துகளில் ஒன்று.

பாரத்நெட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு

பாரத்நெட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு

இதையடுத்து வேளாண் தொழில் மட்டும் அல்லாமல் அதி நவீன தொழில்நுட்பங்களும் கிராமங்களில் வளர வேண்டும் என்று உணர்ந்த மத்திய அரசு, கிராமங்களில் பிராட்பேண்ட் எனப்படும் அதிவேக இணைய சேவை அளிக்கும் "பாரத்நெட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்! நம்பி வாங்கலாம்!சீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்! நம்பி வாங்கலாம்!

உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கலாம்

உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கலாம்

ஒவ்வொரு கிராமங்களையும் இணைய வலையத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கலாம் என்பது மத்திய அரசின் நம்பிக்கையாக திகழ்ந்தது.

பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம்

பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம்

ஆரம்பத்தில் பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம், 10 லட்சம் கிலோமீட்டரிலுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கான இணைய சேவையை தற்போதுள்ள சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவீத மலிவான விலையில் வழங்குவதாகவே இருந்தது. ஆனால் முதற்கட்டமாக இலவச சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இலக்கு நிர்ணயித்த மத்தியஅரசு

இலக்கு நிர்ணயித்த மத்தியஅரசு

பாரத்நெட் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இதுவரை சுமார் 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது. இலவச வைபை சேவையினை இந்தியா முழுக்க 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. டிஜிட்டல் கிராமங்கள் இணைக்கப்பட்ட கிராமமாக உருவாக்கப்படும். இங்கு பொதுமக்கள் மத்திய அரசின் செயல்திட்டங்களை இ சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர்

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர்

கடந்த 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் பாரத் நெட்' இணையதள இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6,000 கோடி செலவிடப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரில் முறையாக விதிகளை பின்பற்றவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் டெண்டரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாரத்நெட் திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் குறித்து குற்றச்சாட்டுகள்

பாரத்நெட் திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் குறித்து குற்றச்சாட்டுகள்

தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் குறித்து சில நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தன. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு விளக்கங்களை தெரிவித்ததோடு இதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜியோ ரூ.222 விலைக்கு அட்டகாச திட்டம்: அதிரடி சலுகைகள் மற்றும் இலவச சந்தாக்கள்!ஜியோ ரூ.222 விலைக்கு அட்டகாச திட்டம்: அதிரடி சலுகைகள் மற்றும் இலவச சந்தாக்கள்!

ரூ.1,950 கோடியில் 12524 கிராமங்களில் இணைக்க முடிவு

ரூ.1,950 கோடியில் 12524 கிராமங்களில் இணைக்க முடிவு

அதிவேக இன்டெர்நெட் இணைப்பிற்கு சுமார் ரூ.1,950 கோடியில் 12524 கிராமங்களில் இணைக்க முடிவு செய்தது. இந்த திட்டங்களுக்கான கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில் கருவிகள் கொள்முதலுக்கு விதிகள் மீறப்பட்டதாகவும் , இந்த டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறுடெண்டர் விடும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
centre cancels Rs 1,950 crore tamilnadu's bharatnet tender

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X