மின்னல் தாக்குதல் குறித்து செல்போனில் எச்சரிக்கை:இந்திய வானிலை மையம் .!
மேலும் இதுபோன்று பல்வேறு புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என இந்திய வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வானிலை ஆய்வு தொடர்பான 3நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று முன்தினம் ஓடிசா மாநிலம், புவனேஸ்வரில் தொடங்கியது, இதில் இடி மின்னல் ஏற்படுவது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதுடன், அதை செல்போனிலும் தகவல் அனுப்பும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்று பல்வேறு புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என இந்திய வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இப்போது கொண்டுவரும் இந்த புதிய முயற்சி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

200 விஞ்ஞானிகள்
மேலும் இந்த 3நாள் சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்க, தென் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றுள்ளனர், இந்த கருத்தரங்குக்கு ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

கே.ஜே ரமேஷ்
இந்நிகழ்ச்சியில் இந்திய வானிலை துறை பொது இயக்குனர் கே.ஜே ரமேஷ் தெரிவித்தது என்னவென்றால், இந்தியாவில் இயற்கை பேரிடரால் அதிகளவில் உயிரழப்பை சந்திக்கும் 2-வது பெரிய மாநிலமாக ஒடிசா விளங்குகிறது.

முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யும்
இதனால் இடி மின்னல் குறித்து முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு, உருவாக்கியுள்ளது இதன் மூலம், மின்னல் ஏற்படும் இடங்கள் குறித்த எச்சரிக்கை செல்போன்களில் குறும் செய்திகளாக அனுப்பப்படும். செயற்கைக்கோள்கள், ரேடார்கள் அனுப்பும் படங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்
அடிப்படையில் இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை செய்யப்படும்.

மக்களை பாதுகாக்கும்
மேலும் இயற்கை பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முறையான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள ஒடிசா அரசுக்கு எனது பாராட்டுகள், இடி, மின்னல் குறிதது எச்சரிக்கை செய்யும் பணியில் இந்திய வானிலை
மையத்துடன் ஒடிசா இணைந்து என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications