மார்ச் 31 வரை கெடு; கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடம் மத்திய அரசு கேட்ட 6 கேள்விகள்!

1. மேற்கூறப்பட்டுள்ள மீறல்களை நிகழ்த்தி (குறிப்பிட்ட தேவைகளை அடையும் நோக்கத்தின் கீழ்) இந்தியர்கள் சார்ந்த தரவுகளை சேகரிப்பதற்கு யார் மூலமாகவாவது நியமிக்கப்பட்டீர்களா.?

|

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேட்கப்பட்டுள்ள ஆறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடம் மத்திய அரசு கேட்ட 6 கேள்விகள்!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், எவ்வாறு பயனர்களின் தரவுகள் பெறப்பட்டது, சம்பந்தப்பட்ட தனிநபர்களிடமிருந்து இது சார்ந்த ஒப்புதல் பெறப்பட்டதா, அத்தகைய தரவு சேகரிப்புகள் எதற்காக பயன்படுத்தப்படும் போன்ற ஆறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்விகள் பின்வருமாறு :

அந்த கேள்விகள் பின்வருமாறு :

1. மேற்கூறப்பட்டுள்ள மீறல்களை நிகழ்த்தி (குறிப்பிட்ட தேவைகளை அடையும் நோக்கத்தின் கீழ்) இந்தியர்கள் சார்ந்த தரவுகளை சேகரிப்பதற்கு யார் மூலமாகவாவது நியமிக்கப்பட்டீர்களா.?
2. மேற்கூறப்பட்டுள்ள மீறல்களில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் என்னென்ன?
3. இத்தகைய தரவுகள் கைப்பற்றப்பட்டது எப்படி.?

எதாவது ப்ரொபைலிங் செய்யப்பட்டதா.?

எதாவது ப்ரொபைலிங் செய்யப்பட்டதா.?

எதாவது ப்ரொபைலிங் செய்யப்பட்டதா.?
4. தனிநபர்களிடமிருந்து தரவு சேகரிப்புகள் சார்ந்த ஒப்புதல் பெறப்பட்டதா?
5. இம்மாதிரியாக சேகரிக்கப்பட்ட தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகிறது?
6. அத்தகைய தரவுகளின் அடிப்படையின் கீழ் எதாவது ப்ரொபைலிங் (அதாவது அறியப்பட்ட தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு தகவலை பற்றி விவரிப்பது) செய்யப்பட்டதா.?

அரசியல் சார்ந்த முடிவுகளை மாற்றும் நோக்கத்தின் கீழ்.!

அரசியல் சார்ந்த முடிவுகளை மாற்றும் நோக்கத்தின் கீழ்.!

ஏற்கனவே பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவில் சோதனை நிகழ்த்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளதும், அரசியல் சார்ந்த முடிவுகளை மாற்றும் நோக்கத்தின் கீழ், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஆனது பேஸ்புக் தரவுகளை வாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தும் - இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்ப ஆணையரான - எலிசபெத் டென்ஹாமின் கோரிக்கையை லண்டன் உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்களை அடையாளம் காணக்கூடிய, நடத்தைகளை பாதிக்கக்கூடிய.!

வாக்காளர்களை அடையாளம் காணக்கூடிய, நடத்தைகளை பாதிக்கக்கூடிய.!

நினைவூட்டும் வண்ணம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட பல நாடுகளில் நடந்த தேர்தல் முடிவுகளை பாதிக்கும் நோக்கத்தின் கீழ், பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்த காரணத்திற்காக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்டீபன் கே.பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சர் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் பிரதான வேலையே அமெரிக்க வாக்காளர்களை அடையாளம் காணக்கூடிய மற்றும் அவர்களது நடத்தைகளை பாதிக்கக்கூடிய தரவுகளை சேகரித்து வழங்குவதே ஆகும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
ஒரு பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு.!

ஒரு பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு.!

அதாவது பேஸ்புக்கின் வழியாக சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு சில மனோவியல் மாதிரியாக்க நுட்பங்கள் (psychographic modelling techniques) உருவாக்கப்பட்டுள்ளன. பின்னர் அது அமெரிக்க அதிபர் தேரத்லின் போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனமும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று முதலில் கூறினாலும், பின்னர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் தலைமை நிர்வாகியான, அலெக்ஸாண்டர் நிக்ஸ் நீக்கப்பட்டதும், மார்க் ஸூக்கர்பெர்க், செய்தித்தாளில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Centre asks six questions to controversial data mining firm Cambridge Analytica. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X