Home
News

புது App வந்ததும் வேலையை காட்டிட்டாங்க.. புது ஆதார் Verification ரூல்ஸ்.. இனி ஹோட்டல், ஹாஸ்பிடல், தேர்வு எழுத?

ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை (Document misuse) குறைப்பதையும், தனியுரிமை பாதுகாப்புகளை (Privacy safeguards) வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு.. ஆதார் தொடர்பான புதிய விதிமுறைகளை பரிசீலிக்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோட்டல் மற்றும் விருந்தினர் இல்லப் பதிவு (Hotel and guest house registration), பார்வையாளர் மேலாண்மை (Visitor management), மருத்துவமனை நோயாளி சரிபார்ப்பு (Hospital patient verification) மற்றும் தேர்வு எழுதுவோர் சரிபார்ப்பு (Examination candidate checks) போன்ற குடிமக்களுக்கான சேவைகளுக்கு ஆப் அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பை பயன்படுத்துவதை பரிசீலிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

புது ஆதார் Verification ரூல்ஸ்.. இனி ஹோட்டல், ஹாஸ்பிடல், தேர்வு எழுத?

சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ஒரு புதிய ஆதார் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், அது ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அடையாள சரிபார்ப்புக்காகக் கோரும் அமைப்புகளுடன் ஆதார் சரிபார்க்கக்கூடிய தகவல்களைப் பாதுகாப்பாக சேமிக்கவும், காட்சிப்படுத்தவும் மற்றும் பகிரவும் அனுமதிக்கிறது என்றும் கூறியுள்ளது.

அந்த தகவலின்படி, இந்த ஆப் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையானது, தரவு தனியுரிமை, ஆதார் புகைப்படங்களின் தவறான பயன்பாடு, ஆஃப்லைன் ஆதார் தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் சரிபார்ப்பின் போது நேரில் இருந்ததற்கான ஆதாரம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதோடு, பாதுகாப்பான அடையாள சோதனைகளை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், காவல்துறை, ஊர்க்காவல் படை, திஹார் சிறை, தடயவியல் ஆய்வகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகள் மற்றும் முகமைகள் இந்த ஆப்பை பயன்படுத்த வேண்டும் என அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையின் கீழ், சரிபார்ப்பை மேற்கொள்ளும் நிறுவனம் அங்கீகாரத்திற்காக ஒரு க்யூஆர்குறியீட்டை உருவாக்க அல்லது திறக்க இந்த ஆப்பை பயன்படுத்தும்.

சரிபார்ப்புக்கு உட்படும் நபர் அந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வார்; அதைத் தொடர்ந்து, பெயர், வயது மற்றும் மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களுடன் அந்த நபரின் புகைப்படமும் திரையில் தோன்றும். இதனால், நேரடி ஆவணங்களையோ அல்லது அவற்றின் நகல்களையோ சமர்ப்பிக்காமலேயே சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய முடியும்.

விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் ஆதார் அட்டைகளின் நகல்களை பகிர்வது வழக்கமான நடைமுறையாக உள்ளது; இச்செயல்முறையை மாற்றுவதன் மூலம் அதனுடன் தொடர்புடைய அபாயங்களை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "அத்தகைய நகல்கள் தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால் அவை தவறாக பயன்படுத்தப்படலாம். மேலும், தவறான காரணங்களைக் கூறி ஆதார் தொடர்பான தகவல்களைச் சேகரித்து, பின்னர் அவற்றைப் பயன்படுத்திப் பொருட்கள் அல்லது கடன்களை பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ள பின்னணியிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

அதிகாரிகள் சுட்டிக்காட்டிய ஒரு சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது; ஆனால் அதற்கு பதிலாக, அவர்களின் ஆதார் விவரங்கள் லேப்டாப்கள், மொபைல்கள் மற்றும் பிற மின்னணுப் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களிடம் கடன் தவணைகள் கோரப்பட்டபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

ஆதார் ஆப் அடிப்படையிலான ஆஃப்லைன் (நேரடி இணைய தொடர்பற்ற) சரிபார்ப்பு முறையை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், டிசம்பர் 9, 2025 அன்று அரசிதழ் அறிவிப்பு மூலம் வெளியிடப்பட்ட 'ஆதார் (அங்கீகாரம் மற்றும் ஆஃப்லைன் சரிபார்ப்பு) திருத்த விதிமுறைகள், 2025-இன் படி யுஐடிஏஐI-யிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அந்த கடிதத்தின்படி, மத்திய அரசு துறைகள், மாநில அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள், ஆஃப்லைன் சரிபார்ப்பு முறையை பயன்படுத்தும் முகமைகளாக ஏற்கனவே பதிவு செய்துள்ளன. "இந்த விரிவான முன்னெடுப்பானது, ஆதார் சரிபார்ப்பு முறையை வழக்கமான ஆவண நகல் சேகரிப்பு நிலையிலிருந்து மாற்றி, ஒப்புதல் அடிப்படையிலான டிஜிட்டல் செயல்முறைக்கு கொண்டு செல்லும் முயற்சியை குறிக்கிறது; இதில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட, சரிபார்க்கக்கூடிய தகவல்கள் மட்டுமே பகிரப்படுகின்றன" என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Central Govt Asked States to Follow App Based Aadhaar Verification For Hotel Hospital Examination
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X