மார்ச் மாதத்திற்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவை: இலக்கு வைத்த மத்திய அரசு
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்க அரசு இலக்கு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து 5ஜி சேவைகளை அனைத்து நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் விரவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 5ஜி சேவையானது நொடிக்கு 20 ஜிபிபிஎஸ் வரையிலும் குறைந்தது 100 எம்பிபிஎஸ்-க்கு அதிகமாகவும் டேட்டா பரிமாற்ற வேகத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 5ஜி சேவை
5ஜி சேவைகள் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள சில நகரங்களில் வெளியிடப்பட்டது. மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மார்ச் 2023க்கு ஒடிசாவில் குறைந்தது நான்கு நகரங்களிலாவது 5ஜி வசதி கிடைக்கும் எனவும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் முழுமையாக 5ஜி சேவை கிடைக்கும் என குறிப்பிட்டார்.

200 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 5ஜி சேவை
அதேபோல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 5ஜி சேவை வழங்குவதை அரசு இலக்காகக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து 5ஜி சேவைகள் அடுத்தடுத்து நகங்களிலும் கிராமப்புறங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். நகரங்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

நான்கு நகரங்களில் ஜியோ 5ஜி சேவை
இந்தியாவில் முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. சைலண்டாக ஜியோ நான்கு நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. ஜியோவின் 5ஜி சேவையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் கிடைக்கிறது.

எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை
மலிவு விலையில் அதிவேக 5ஜி என்ற முழக்கத்துடன் ஜியோ களமிறங்கி இருக்கிறது. Jio 5G வெல்கம் ஆஃபரின் கீழ், தகுதியான பயனர்களுக்கு நிறுவனம் 1gbps இலவச வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, சிலிகுரி, வாரணாசி மற்றும் நாக்பூர் ஆகிய எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கிறது.

5ஜி சேவை ஒப்பீட்டு அளவு
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களின் சராசரி 5ஜி பதிவிறக்க வேகத்தை வெளியான ஓக்லா அறிக்கை ஒப்பிட்டுக்காட்டுகிறது. இந்த ஒப்பீடானது இரண்டு நிறுவனங்களும் 5ஜி சேவை வழங்கும் நான்கு நகரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் வாரணாசி பகுதியில் வழங்கப்படும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி வேகம் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்ற விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

டெல்லியில், ஏர்டெல் கிட்டத்தட்ட 200 Mbps சராசரி பதிவிறக்க வேகத்தை எட்டியுள்ளது. இதன் உடன் ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதம் முதல் 600mbps சராசரி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்திருக்கிறது.

அதிக மற்றும் அதீத 5ஜி வேகம்
கொலக்கத்தாவைப் பொறுத்தவரை ஏர்டெல் 33.83mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் 482.02mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் எட்டி இருக்கிறது. மும்பையில் ஏர்டெல் 271.07mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் ஜியோ ஜூன் முதல் 515.38mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் அடைந்திருக்கிறது.
இறுதியாக வாரணாசியில் பார்க்கும் போது இந்த பகுதியில் ஏர்டெல் வேகம் மேலோங்கி இருக்கிறது. வாரணாசியில் ஏர்டெல் 516.57 எம்பிபிஎஸ் 5ஜி வேகத்தையும், ஜியோ 485.22 எம்பிபிஎஸ் 5ஜி வேகத்தையும் எட்டி இருக்கிறது.
ஒப்பீட்டளவில் ஜியோ பெரும்பாலான பகுதியில் அதிக மற்றும் அதீத 5ஜி வேகத்தை பதிவு செய்திருக்கிறது.

89 சதவீத பயனர்கள் 5ஜிக்கு தயார்
Ooklas சமீபத்தில் நுகர்வோர் கணக்கெடுப்பை நடத்தியது. அதில் சுமார் 89 சதவீத இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் 5G க்கு மேம்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள நெட்வொர்க்கை விட 5ஜி வேகம் அதீத வகையில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications