இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.!

|

தற்சமயம் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இ-சிகரெட்

மேலும் இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது, இ-சிகரெட் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இ-சிகரெட் பயன்பாட்டால் மூளை வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவை பாதிக்கப்படுவதோடு மன அழுத்தம்பதற்றம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை
விதித்துள்ளது.

கேன்சர் உயிரிழப்புகள்

குறிப்பாக இ-சிகரெட் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதனால் கேன்சர் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டுவருகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு
தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.!பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.!

77சதிவிகிதம்

பின்பு இந்த இ-சிகரெட்டை 77சதிவிகிதம் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளதாகவும் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 சாதரன சிகரெட்டை போலவே

இ-சிகரெட் பொதுவாக சாதரன சிகரெட்டை போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியாகும், இதனுள் நிகோடின் மற்றும்புரோபைலின் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதை சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.

80கோடி

சிகரெட் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால் ஏற்படும் விசையால் பேட்டரி இயங்கும் அப்போது நிகோடின் சூடேறி புகை கிளம்பும். மேலும் இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80கோடி டாலர்களுக்குவிற்பனை ஆனதாக சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Central Government Issued Order to Ban E-Cigarettes: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X